பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு Í 37

(இ-ள்) புதுமணம் வீசும் மலர் மாலே யணிந்த தேவர்கள் எமது பெருமானே! எங்கும் நீக்கமற நிறைந்த முதல்வனே முறையோ என்று கதறித் தம்மை நலியும் சூரபதுமன் வன்மையை எடுத்துக்கூறி முறையிட அழகிய பவளம் போலும் திருமேனியையுடைய அறுமுகனே! நீ சென்று அத்தகைய தேவர் பகையினைக் கொன்ருெழிப்பா யாக என அருள்புரிந்த தனி முதல்வன் சிவபெருமானே όf-g" .

அசுரன் - சூரபதுமன். பவழத் தன்னமேனி ? குறுந்-கடவுள் என்ரு ராதலின் அம்பவளமேனி அறுமுகன் என் ருர் .

குருகிந்தை

86. ஈச னடியார் இதயங் கலங்கிடத்

தேசமும் நாடுஞ் சிறப்பும் அழிந்திடும் வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும் நாசம தாகும் நந்நந்தி யாணேயே. (534)

சிவனடியார்களாகிய குருவை யிகழ்தலாலுளவாம் தீமை யினே யுணர்த்துகின்றது.

(இ.ஸ்) சிவனடியார்களின் சிந்தை கலங்குமாயின் பெரிய தேசமும் அதன் உட்பகுதிகளாகிய நாடும் அவற் றின் சிறப்பும் சிதைந்தொழியும். வானுலகில் இந்திரனது அரச பீடமும் மண்ணுலகில் பெருவேந்தரது ஆட்சிப் பீடமும் கெட்டொழியும். இது நம்முடைய நந்தியாகிய குருவின் ஆணேயாகும் எ - று.

தேசம், பெரியது; நாடு, சிறியது. வாசவன்-இந்திரன்.