பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

145


93. வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே

ஏமுற்ற முப்பத் திரண்டும் இரேசித்துக் காமுற்ற பிங்கலேக் கண் ணுக இவ்விரண் டோமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க

வுண்மையே. (573)

பிராணுயாம முறையாமாறு இதுவென உணர்த்துகின்றது.

(இ - ள்) இடகலேயால் (இடது மூக்கின் வழி) பதினறு மாத்திரை கால எல்லே மூச்சை உள்ளேயிழுத்துப் பூரகஞ் செய்து விரும்பத்தக்க பிங்கலேக் கண்ணுக (வலது மூக்கின் வழி) முப்பத்திரண்டு மாத்திரை காலவளவு இரேசித்தலும் (வெளியே விடுவதும்) இத்தகைய இடகலே பிங்கலே இரண்டின் வழி நிகழும் வளியினையும் சுழுமுனேயில் உந்தித் தானத்தின் அக்கினிகுண் , த்தில் அறுபத்து நான்கு மாத் திரை கால எல்லே உள்ளே நிறுத்திக் கும்பித்தலும் (நிறுத்துதலும்) பிராணயாமத்தின் இயல்பாம் எ-று.

ஈரெட்டு மாத்திரை வாமத்திற் பூசித்து, காமுற்ற பிங் கலைக் கண்ணுக முப்பத்திரண்டும் இரேசித்து இவ்விரண்டு ஒமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே என இயை யும். வாமம் - இடப்பக்கம்; இடமூக்கின் வழியாகிய இட கலயை யுணர்த்தியது. ஈர்எட்டு - பதினறு மாத்திரை. பூரித்தல்-உள்ளே இழுத்தல். இரேசித்தல்-வெளிவிடுதல். கும்பித்தல் - உள்ளே நிறுத்துதல். பிங்கல - வலமூக்கின் வழியியங்கும் காற்று. இவ் இரண்டு - இத்தகைய இடை கலே , பிங்கலே என்னும் இரண்டு. உந்தித்தானத்திலுள்ள அக்கினி மண்டலத்தில் கும்பிக்கப்படுதலே ஒமத்தாற் கும்பிக்க என்ருர் எட்டெட்டு - அறுபத்து நான்கு மாத் தரை கால எல்லே. இடகலேயா ற் பூரித்துக் கும்பித்துப்