பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு i 63

செவிக்குப் புலகைச் செபித்தலும் என மந்திர செபத்துக்கு இவ்விருவகையும் கூடாது. புகை- வாயு; பிராணன் , புகையுண்டு பூரித்தலாவது திருவைந் தெழுத்தையே பிராணவாயுவுடன் கொண்டு உள் நிறைத்தல். வல்லார்நரகத்தின் மேலும் கும்பகம் (நிறுத்துதல்) செய்ய வல்லார்.

திருவம்பலச் சக்கரம்

மந்திரங்களின் மேம்பட்ட திருவைந்தெழுத்திற்கு அமைந்த சக்கரங்களுள் சிறப்புடையது திருவம்பலச் சக்கரம். சிதாகாசப் பெருவெளியில் ஆனந்தக் கூத்தாடும் அம்பலவாணர் அருட்சத்தியாகிய சிவகாமியம்மையுடன் மந்திர வடிவாய் நின்று நிலவுவது இந்த யந்திரமாகும். மந்திரத் தலையாக விளங்குவது திருவம்பலச் சக்கரம் என்பர் .

106. அஞ்செழுத்தாலே அமர்ந்தனன் நந்தியும்

அஞ்செழுத்தாலே அமர்ந்த பஞ்சாக்கரம் அஞ்செழுத்தாகிய அக்கர சக்கரம் அஞ்செழுத் துள்ளே அமர்ந்திருந்தானே.

(934)

திருவைந்தெழுத்தே இறைவனுக்குரிய மந்திரவடிவா யுள்ளமை கூறுகின்றது .

(இ-ள்) நந்தியாகிய இறைவன் அஞ்செழுத்தாகிய மந்திர வடிவாக அமர்ந்துள்ளான். அவன் விரும்பி யமர்ந்த பஞ்சாக்கரமும் ஐந்தெழுத்தால் ஆகியதே. ஐந் தெழுத்தாகிய அக்கரங்கள் அடைக்கப்பட்ட சக்கரத் துள்ளே ஐந்தெழுத்தையே தனது திருமேனியாகக் கொண்டு இறைவன் எழுந்தருளியுள்ளான் எ-று.