பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 திருமந்திரம்

107. ஆகின்ற பாதமும் அந்நவாய் நின்றிடும்

ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம் ஆகின்ற சீயிருதோள் வவ்வாய்க் கண்டபின் ஆகின்ற வச்சுடர் யவ்வியல் பாமே. (941)

திருவைந்தெழுத்தே கூத்தப் பெருமான் திருமேனி யாதலேக் கூறுகின்றது.

(இ-ள்) உயிர்கட்கு ஆக்கமளிக்கும் திருவடியும் அந்த நகரமாய் நிலைபெறும். உந்திச் சுழியுள் அவ்விடத்தே மகரம்,பொருந்துவதாம். சிகாரம் இரண்டு தோள்களாகவும், வகாரத்தை வாயாகவும் கண்டபிறகு திருமுடிக்கண் விளங்குகின்ற சுடர் யகாரத் தன் மையதாகும் எ-று.

  • நவ் விரண்டு காலதாய் நவின்ற மல் வயிறதாய்

சில் விரண்டு தோளதாய் சிறந்த வவ்வு வாயதாய் யவ் விரண்டு கண்ணதாய் எழுத்து நின்ற நேர்மையிற்

செவ்வை யொத்து நின் ருதே சிவா மஞ்செழுத் துமே . (சிவ வாக்கியர்-97)

இதன் ஈற்றடி ஆகின்ற வச்சுடர் யவ்வியல்பாமே? என்றி ருத்தல் வேண்டும் என்பது முடியப்பார்: (32) என்னும் உண்மை விளக்கத்தால் புலம்ை.

பொன்னம்பலத்திலே ஐந்தொழில் திருக்கூத்தியற்றும் இறைவன் தன் திருவடியிலே நகரமும், திருவுந்தியிலே மகரமும், திருத்தோள்களிலே சிகரமும், திருமுகத்திலே வகரமும், திருமுடியிலே யகரமும் ஆகவும், திருவாசி ஓங்காரமும் அதன்கண் உள்ள சுடர்கள் ஓங்காரத்தை விட்டு நீங்காத பஞ்சாக்கரமும் ஆகவும் அமைய ஆடியரு ளுந் திறத்தினை,