பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 திருமந்திரம்

அம் முதல்வனுடைய புகழ்த்திறங்களைப் பாடித் துதியுங் கள். தலையாரக்கும்பிட்டு வணங்குங்கள். அவ்வாறு வணங்கிய பின் அன்பில்ை ஒரு நெறிப்பட்ட உமது நெஞ் சினேயே கோயிலாகக் கொண்டு எழுந்தருளியிருப்பான் அம்முதல்வன் எ-று.

நன்மையாவது வழிபடும் அடியார்களது இடரகற்றி யாட்கொள்ளும் அருள் நலம். தேடுதல்-அன்பர் பலரையும் வினவிச் செல்லுதல். திரிதல்-சிவபரம் பொருளே எதிர்ப் பட்டுக் கண்டு மகிழவேண்டும் என்னும் ஆர்வத்துடன் அடியார் பலருடன் பலவூர்களிலும் சுற்றியலேதல். பாடுதல், வாக்கின் தொழிதல். பணிதல், காயத்தின் தொழில். இவ் விரண்டும் சொல்லவே இனம்பற்றி மனத்தின் தொழிலாகிய நினேத்தலும் கொள்ளப்படும். பணிந்தபின், பணிந்தால்; பின்னிற்று வினையெச்சம் ஏதுப்பொருளிற் பயின்றுளது . கூடிய நெஞ்சம்-புறத்தே பொறிவழி செல்லாது அறிவின் வழி அகமுகப்பட்டு நின்ற உள்ளம். கோயிலாக் கொள்ளு தல், நினேப்பவர் மனங் கோயிலாக் கொண்டவன்? என வரும் திருக்குறுந்தொகையாலும் விளக்கப்பெற்றது . அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தன் என்பர் அப்பர் அடிகள்.

கிரியை 112. கானுறு கோடி கடிகமழ் சந்தனம்

வானுறு மாமல ரிட்டு வணங்கினும் ஊனினே நீக்கி யுணர்பவர்க் கல்லது தேனமர் பூங்கழல் சேர

வொண்ணுதே. (1452) சிவபூசையாகிய கிரியையில் உள்ளம் ஒருப்படாதவழி பயனில்லை என்கின்றது.

(இ-ள்) காட்டின்கண் பொருந்தி வளர்ந்த கோடியோ சனே தூரம் மணங்கமழும் சந்தனமும் வானளவும் மண