பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

173


மோங்கும் பெருமை வாய்ந்த நறுமலர்களும் இட்டுப் புறத்தே பெருமானே வழிபட்டாலும் உடற்பற்றினே யொழித்து உள்ளத்துள்ளே ஞானத்தில்ை உணர்ந்து போற்றும் அகப்பூசையாளர்க்கன்றி ஏனேயோரால் இன்ப மாகிய தேன் சுரக்கும் இறைவனுடைய பொலிவார்ந்த திருவடியினைச் சார்தல் இயலாது எ-று.

கடி - மணம். சந்தனம் மலர் என்பவற்றை இட்டு வணங்குதல் புறத்தே செய்யப்படும் பூசனே. ஊனினே நீக்கி உணர்தல் என்றது ஐம்பொறி யடக்கமுடையராய் உடற் பற்றினே நீக்கி இறைவனே உள்ளத்துள்ளே வைத்து உணர்ந்து போற்றுதலாகிய அகப் பூசையின. இதன் இயல்பு,

"தாவியவன் உடனிருந்துங் காணுத தற்பரனே

ஆவிதனில் அஞ்சொடுக்கி அங்கணனென் ருதரிக்கும் நாவியல் சீர் நமிநந்தி யடிகளுக்கு நல்குமவன் கோவியலும் பூவெழுகோற் கோளிலியெம் பெரும்ானே?

1-62-6 எனவும் காயமே கோயிலாக எனவும் வரும் திருப்பாடல் களால் இனிது புலம்ை.

யோகம்

113. பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல்

சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது ஒவியம் போல உணர்ந்தறி வாளர்க்கு நாவி யணைந்த நடுதறி யாமே. (1459) சிவஞானத்தினை யுணர்தற்கு உபாயமாவது சிவயோகம் என்பது உணர்த்துகின்றது.

(இ-ள்) மலரிடத்தே நறுமணம் உள்ளிருந்து விளேயு மாறு போன்று உயிரினுக்குள்ளே சிவமணம் விளேந்தது . சித்திரம் போல அசைவற்றுச் சிவத்தைத் தியானித்து (யோகநிலையில்) இருந்து உணர்ந்து அறிய வல்லார்க்கு