பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 திருமந்திரம்

ஞானமாகிய தெளிவினுல் உயிரையும் பாசத்தையும் பிரித் தறியமாட்டாதார் பாசபந்தமாகிய பிறவிப்பிணிப்பினின்றும் நீங்கி உய்திபெற இயலாதவராவர் எ-று.

தலைவனே யுணர்தற்கும் தம்மை யுணர்தற்கும் பாசம் நீங்குதற்கும் பரமுத்தி யடைதற்கும் சன்மார்க்கமே சாதன மாய் நின்று உதவும் என்பதாம். சீவன் அறிவு நலம் வாய்ந்த உயிர். தீர்தல் - விடுபடுதல்.

சகமார்க்கம்

117. யோகமும் போகமும் யோகியர்க் காகுமால்; யோகஞ் சிவரூபம் உற்றிடும்; உள்ளத்தோர் போகம் புவியிற் புருடார்த்த சித்திய

தாகும் இரண்டும் அழியாத

யோகிக்கே. (1491) சகமார்க்க மெ இம்மை மறுமையாகிய இருமையின்பங்களே யும் ஒருங்கே நல்கவல்லது என்பது உணர்த்துகின்றது .

(இ.ஸ்) சகமார்க்கத்தில் ஒழுகும் யோகியர்க்கு யோக நெறியாகிய பொறியடக்க முதலியனவும் போகமாகிய நுகர்ச்சி வன்மையும் ஒருங்கு உளவாகும். யோகத்தின் பயனுகச் சிவசாரூபம் பொருந்தும். உள்ளத்தால் ஒர்ந்து நுகரும் போகமாக நாற்பொருட் பயனும் எளிதிற் கைவரப் பெறும் நிலையுளதாம். இவையிரண்டும் கெடாத யோக நெறியிலொழுகுவார்க்கே உளவாகும் எ-று.

யோகம்-யோகத்திற்குரிய எண்வகை யுறுப்புக்கள். போகம்-உலக வாழ்வாகிய நுகர்ச்சி. உள்ளத்து ஓர் போகம்-உள் ளத்தால் ஒர்ந்துணரத் தகுவதாகிய போக நுகர்ச்சி; எனவே உடம்பானன்றி உள்ளத்தால் ஒர்ந் துணர்தலாகிய நிலேயே உண்மையான நுகர்ச்சியாம்