பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

183


(இ-ள்) சடமாகிய பாசம் ஆன்மாவின் அறிவெல்லேக் குள் அடங்கி நிற்க இறைவனே வழிபட்டு மகிழும் நிலே சாலோகமாகும். உயிரைப் பிணித்துள்ள பாசம் உயிரறிவை மறைத்தலாகிய தன்மை யிழந்து அருள்வழி விலகி நிற்றல் சாமீபமாகும். பசுகரணங்களாகிய பாசப்பகுதி பதிகரணங் களாக மாறுதல் சாரூபமாகும். பாச ஞானமாகிய நூலறி வும் பசு ஞானமாகிய ஆன்ம போதமும் கரைந்தொழியப் பதியாகிய பரம்பொருளுடன் இரண்டறக் கலந்து ஒன்ருதல் சாயுச்சியமாகும் எ-று. 122. சைவஞ் சிவனுடன் சம்பந்த மாவது

சைவந் தனேயறிந் தேசிவஞ் சாருதல் சைவஞ் சிவமன்றிச் சாராமல் நீவுதல் சைவஞ் சிவானந்தஞ் சாயுச் சியமே. (1512) சைவம் என்னும் சொற்பொருளே விரித்துக் கூறுமுகமாகச் சைவங்கூறும் அத்துவித முத்தியின் இயல்பின விளக்கு கின்றது.

(இ-ள்) சைவமாவது சிவம் உலகுயிர்களுடன் ஒன்ருய் வேருய் உடய்ை நிற்கும் சம்பந்தத்தினையுடையது. சைவ மாவது ஆன்மா தன்னேச் சிவத்துக்கு அடிமையென் றறிந்து சிவத்தினை வழிபட்டுச் சாருதல். சைவமாவது சித்தாகிய சிவபரம் பொருளன்றி அசித்தாகிய பாசங்கள் தன்னைச் சாராதவாறு நீக்கியொழுகுதல், சைவமாவது சிவத்துடன் இரண்டறக் கலந்து அம்முதல்வன் வழங்கும் சிவானந்தமாகிய பேரின் பத்தினைத் துய்த்து மகிழ்தலாகிய சாயுச்சிய நிலையாகும் எ-று.

சிவத்தோடு உலகுயிர்களுக்குளதாகிய சம்பந்தத்தை விளக்கும் சமய நெறியே சைவம் என்பார், சைவம் சிவத்தோடு சம்பந்தமாவது? என்ருர், சிவமயம் என்பதும் இத்தொடர்பே குறிக்கும். சார்ந்ததன் வண்ணம் ஆம் தன் மையதாகிய ஆன்மா சதசத்தாகிய தன்னியல்பினே