பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

187


நிகழ்தல். இன் அருட்சத்தி என்றது, முன் ஆணவமலம் பக்குவமாதற் பொருட்டுச் சினமருவு திரோயியாயிருந்த அருளே அம்மலங்கழலும் பக்குவத்தினை யுண்டாக்கியபின் இனிய அருட்சத்தியாயிற்று என்பதாம். குணம் பல நீக்கித் தரும் அரன் ஞானம் என்றது, தாழ்ந்த உயிர்க்குனங்களேப் போக்கி மேலான சிவகுணம் பொருந்துமாறு சிவஞானத் தைத் திருவருட் சத்தியே விளேக்கும் என்பதாம். தன் செயலறுதல் ஆன்மபோதங் கெடுதலால் நன்றே செய் வாய் பிழைசெய்வாய் நானுே இதற்கு நாயகமே. எனத் தன்செயலொழிந்து இறைவன் செயலில் அடங்கி நிற்றல். திரிமலம் - ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங் கள் . ஆன்மா, தன் பொருட்டன் மையழிந்து சிவம் ஒன் ருயே ஒழியாமலும், சிவத்தின் வேருய்த் தான் தனித்து நில்லாமலும், பாலொடு அளாவிய நீர் தன் உண்மை கெடாமல் பாலின் தன்மைய தாய் அதனுடன் பிரிவறக் கலந்து ஒன்ருதல் போன்று, தன் உண்மை கெடாமல் சிவத்துடன் இரண்டறக் கலந்து ஒன்ருதலே சிவமாதல் எனப்படும் .

உயிர் திருவருட் பதிவுபெற்றுக் குருவருளால் தூய்மைபெறும் இந் நிலேயினை விளக்குவது,

இருவினைச் செயல்கள் ஒப்பின் ஈசன்றன் சத்திதோயக் குருவருள் பெற்றுஞான யோகத்தைக் குறுகிமுன்னைத் திரிமலமறுத்துப் பண்டைச் சிற்றறிவொழிந்து ஞானம் பெருகிநாயகன் முன்பாதம் பெறுவது சுத்தமாமே? (280) என வரும் சித்தியாராகும்.

புறச்சமய துண்டணம்

சித்தாந்த சைவமல்லாத ஏனேப் புறச்சமயங்களின் பொருந்தாமை கூறுதல்