பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு Í 97

"எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க்

கிங்கே யென் றருள்புரியும் எம்பெருமான் ?

என ஆளுடைய பிள்ளையாரும்

‘ஆறுசமயத் தவரவரைத் தேற்றுந் தகையன?

என ஆளுடைய அரசரும்

அறிவினுன் மிக்க அறுவகைச் சமயம்

அவ்வவர்க் கங்கேயா ரருள் புரிந்து ? என நம்பியாரூரரும்

வேறுபடு சமயமெல்லாம் புகுந்து பார்க்கில்

விளங்கு பரம் பொருளே நின் விளையாட் டல்லால்

மாறுபடுங் கருத்தில்லை முடிவில் மோன

வாசிதியில் நதித்திரள் போல் வயங்கிற்றம்மா ?

எனத் தாயுமானரும்

கல்லிடைப் பிறந்துபோந்து கடலிடைக் கலந்த நீத்தம்

எல்லேயின் மறைகளாலும் இயம்பெரும் பொருளிதென்னத்

தொல்லேயி னுென்றேயாகித் துறை தொறும் பரந்தசூழ்ச்சிப்

பல்பெருஞ்சமயஞ் சொல்லும் பொருளும்போற்

பரந்த அன்றே.

எனக் கம்பரும் கூறுவன இங்கு நோக்கத்தக்கன. ஒத்துச் சென்றுதன் திருவருட்கூடிடும் உபாயமதறியாமே? என்பது திருவாசகம்.

ஆருங் தந்திரம்

சைவ சித்தாந்த முடிபுகளை உபதேச வாயிலாகக் கேட்டறிந்தோர் அவற்றைச் சிந்தித்துத் தெளிந்துணர்தற் குரிய பொருள்களாகிய ஞானம்பெறும் சாதனங்களே

உணர்த்துவது ஆருந்தந்திரமாகும். இது சிவ குருதரிசனம்