பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு 2O7

ஞாதுரு ஞான ஞேயம்

அறிவான், அறிவு, அறியத்தகு பரம்பொருள் என்னும் இம் மூன்றனுள் அறிவாளுகிய தன்னேயும் அறிவாகிய கருவியினையும் மறந்து அறியத்தகு பொருளாகிய இறை யுணர்வில் ஏகளுகி யொன்றுதல். ஞா துரு-அறிவான்; ஆன்மா. ஞானம்-அறிவு. ளுேயம்-அறியத்தகு பொருளாகிய சிவம். ஆன்மா தற்போதமிழந்து சிவஞானத்தால் இறை யுணர்வில் அழுந்தி நிற்றலே யுணர்த்துவது ஞாதுரு ஞான ளுேயம் என்ற இப்பகுதியாகும்.

141. நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப் பாங்கான பாசம் படரா, படரினும், ஆங்கார நீங்கி யதனிலே நிற்கவே, நீங்கா அமுத நிலைபெற லாமே. (1605)

ளுேயத்து அழுந்துதலால் பாச நீக்கமும் சிவப்பேறும் உளவாம் என் கின்றது .

(இ-ள்) உயிர்களே என்றும் விட்டு நீங்காத நலம் வளர் பேரின் பத்தை நல்கும் சிவபரம் பொருளேத் தியா னித்தல்ாகிய உண்மை நிட்டையில் நிலைத்து நிற்கவே ஆன்மாவை யணுகியுள்ள மலகன்ம மாயையாகிய பாசங் கள் (முன்னர்ப் பிணிப்பவிழ்ந்து நீங்கினவை) மீளவும் தொடர்ந்து பற்றமாட்டா; அவை ஒரோ வழி முன்னே வாசன வயத்தால் மீண்டும் வந்து பற்ற முற்படினும் அகங்காரமாகிய தற்போதத்தின் நீங்கி ஞேயமாகிய மெய்ப்பொருளில் அழுந்துதலாகிய அந்நிலையிற் பிறழாது நிற்கவே, தன்னைச் சார்ந்தாரை என்றும் புறத்தே நீங்க விடாத சிவானந்தமாகிய பேரின் பத்தில் திளைத்து மகிழும் பேராவியற்கையாகிய வீட்டுநிலையினைப் பெறலாம் 6τ - Ω .