பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு 2.13

கிய இரண்டினையும், இவற்றை இருமை வகை என்பர் திருவள்ளுவர். இவ்வுண் மை

இருமை வகை தெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு" (23) எனவரும் திருக்குறளாலும், இருமை வகை தெரிந்து என்பதற்கு, பிறப்பு வீடென்னும் இரண்டனது துன்ப வின்பக் கூறுபாடுகளே ஆராய்ந்தறிந்து’ எனப் பரிமேலழகர் கூறும் உரையாலுல் உய்த்துணரப்படும். துறவுக்கு அடிப் படையாவது தவநெறியே என்பதும் அத்தவ நெறியும் இறைவனுல் அருளிச் செய்யப்பட்ட தென்பதும் விளக்கு வார் துறக்குந் தவங் கண்ட சோதிப்பிரான் என்ருர் . காணுதல்-செய்தல், துறவுக்கு அடிப்படையாவது உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமையாகிய தவமே யாதலின் அதனைத் துறவற வியலில் அருளேச் சாரவைத்து ஒதினர் திருவள்ளுவர். தவநெறிதானும் பொறி வாயிலேந் தவித்தானுகிய இறைவனே வேண்டிப் பெறத்தக்கது என்பது தலேவாவுனே வேண்டிக்கொள் வேன் தவநெறியே எனவரும் ஆரூரர் அருளிச்செயலால் இனிதுணரப்படும். சோதிப்பிராகிைய இறைவன் தன்னை மறப்பிலராய் நித்தம் வாய்மொழிவார்களாகிய அன்பர் களுக்கே அவர்களேப்பற்றிய இருவகைப் பற்றுக்களும் அற்ருெழியப் பதிஞானத்தை உணர்த்தித் துறந்தார்தம் துரநெறியாகிய வீட்டு நெறியைக் காட்டி அருள் புரிவன் என்பார், அமரர்பிரான் மறப்பு:இலராய் நித்தம் வாய் மொழிவார்கட்கு (இருவகைப் பற்றும்) அற, பதி (ஞானம்) காட்டும்’ என்ருர், அற-அற்று ஒழிய பதி என்றது, பதி ஞானமாகிய சிவஞானத்தினே. தண்ணிழலாம் பதி' என வரும் சிவஞானபோதத்தில் பதி? என்பது பதிஞானம் என்ற பொருளிற் பயின்றுள்ளமை இங்கு ஒப்புநோக்கி யுணரத்தகுவதாகும். இனி அறப்பதி காட்டும்’ என்ப தற்கு அறமயமான நகரைக் காட்டுவன்’ எனப் பொருள்