பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 திருமந்திரம்

'இன்பமும் பிறப்பும் இறப்பின்னெடு

துன்பமும் உடனே வைத்த சோதியான் ?

என்பது அப்பர் அருள் மொழியாகும்.

தவம்

சரியை கிரியை யோகம் ஆகிய நெறிகளைத் தவம் என்ருர், தவத்தினில் உணர்த்த’ என்பது சிவஞான போதம்.

147. ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்

நடுங்குவ தில்லே நமனுமங் கில்லே இடும்பையு மில்லே இராப்பக லில்லே

படும்பய னில்லே பற்றுவிட்

டோர்க்கே. (1624)

புலன்களே யடக்கித் தவநெறி நிற்போர் எய்தும் பயன் உணர்த்துகின்றது.

(இ-ள்) புறத்தே புலன் வழிப்படராது உள்முகமாகத் திரும்பி ஞேயமாகிய பொருளில் ஒன்றி நிலைபெற்ற தவச் செல்வராகிய பெருமக்களது உள்ளமானது உலகில் நேரும் இடையூறுகளே யெண்ணித் துளக்கமுறுவதில்லே. அவர் கள் இருக்கும் இடத்தே கூற்றுவனும் அணுகுவதில்லே. துன்பமும் இல்லே; இரவு (மறப்பு) பகல் (நினைப்பு) என்ற வேற்றுமையில்லே . யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களேயும் விட்டொழித்தோ ராகிய அவர்களுக்கு (இவ்வுலகிற் பிறரால்) அடைய வேண்டிய பயன் எதுவும் இல்லே, (ஒன்ருலுங் குறைவின்றி வாழ்வார்) எ-று.