பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு 233

தவ.ெ வாழுக்கமே யன்றித் தவவேடந்தானும் முன்னே த் தவப்பயிற்சியுடையார்க்கன்றி ஏனே யோரால் மேற்கொள் ளுதற்குரிய எளிமையுடையதன்று எனவும், தவவேடத்தி லுைம் அவவேடத்திலுைம் நாட்டிற்கு உளவாம் விளேவுகள் இவை எனவும் உணர்த்துகின்றது.

(இ - ள்) மெய்ம்மையான தவவொழுக்கப் பயிற்சி நிறைந்தவர்களே (நாட்டிற்கு நற்பயன்தரும்) மேலான தவவேடத்திற்கு உரியராவர். வீண்செயலாகிய கூடா வொழுக்கத்தினர் தமக்கு ஒவ்வாத தவவேடத்தினை மேற் கொள் வராயின் அன்னுேர் மிக்க கொலேத்தொழிலேயுடைய வேட்டுவரை யொத்து வாழுமுயிர்க்கு வஞ்சனையால் இடர் விளேப்போராவர். இங்ங்னம் அவத் தொழிலின் மிக்க அவர்கள் மெய்த்தவ வேடத்திற்குப் பொருத்தமுடையவ ராக மாட்டார்கள் . மெய்த்தவ வேடமாகிய அவ்வேடம் உண்மைத் தவவொழுக்கமுடைய உரவோர்களாலன்றி வஞ்ச மனத்தராகிய படிற்ருெழுக்கத்தினரால் கடைபோக மேற்கொள்ளுதற்குரிய எளிமையுடையதன்று எ-று.

தவம் மிக்கவர் - தவவொழுக்கத்தால் மேம்பட்ட உண்மைத் தவசிகள் . தலேயான வேடர் - சிறந்த திரு வேடத்தையுடையார். அவம் மிக்கவர் - பொய்ம்மையான படிற்ருெழுக்கத்தினேயுடையராய்த் தருக்கித் திரிவோர். அதிகொலே வேடர் - வஞ்சனேயாற் புதரில் மறைந்துமிக்க கொலேத்தொழிலேச் செய்யும் வேட்டுவரை யொத்த கொடுந் தொழிலாளர். இத்தொடர், தவமறைந்தல் லவை செய்தல் புதல்மறைந்து, வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று: (274) எனவரும் திருக்குறளே அடியொற்றிய தாகும். வேடர் என்ற சொல்ல வேடத்தை மேற்கொண் டோர் எனவும், பறவை விலங்கு முதலிய உயிர்களே மறைந்து கொல்லும் கொலேத்தொழிலாளராகிய வேட்டு வச் சாதியினர் எனவும் இருபொருளில் அடைகொடுத்து