பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 திருமந்திரம்

குறிப்புடன் எவ்வுயிர்க்கும் பாதுகாப்பளிக்கும் மெய்க்காப் பாக அத்திருநீற்றினைத் திருமேனியிற் பூசிக் கொண்டான் என்பார் கங்காளன் பூசுங் கவசத் திருநீறு என்ருர். பேணியணிபவர்க் கெல்லாம் .ெ ப ரு ைம கொடுப்பது நீருதலின் கவசம் என்ருர். கவசம்-மெய்க்காப்பு. ஆன நீற்றுக் கவசம் அடையப் புகுமின்கள் என்பது திருவாசகம். திரிபுரம் வெந்தவிந்த நிலையில் இறைவன் அதன் நீற்றி&னத் தன் திருமேனியிற் பூசிக்கொண்டு பாண்டரங்கம் என்னும் கூத்தினே யாடியருளினுன் என்பது,

'மண்டமர் பல கடந்து மது ைகயா னிறனிந்து

பண்டரங்க மாடுங்காற் பணயெழி ல8ணமென்ருேள் வண்டரற்றுங் கூந்தலாள் வளர்தூக்குத் தருவாளோ?

எனவரும் கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடலாலும், மிேக்குச் செல்கின்ற போர்களிற் பலவாகிய முப்புரங்களே வென்று அந்த வலியாலே அவர்கள் வெந்து வீழ்ந்த நீற்றை அணிகையினலே பாண்டரங்கம் என்னும் பெயர் பெற்ற கூத்தை?? எனவரும் அதனுரைப் பகுதியாலும் 'எயிலது அட்டதுநீறு இருமைக்கு முள்ளது நீறு" என வரும் திருப்பதிகத் தொடராலும் நன்கு புலம்ை. மங்குதல்ஒளிமழுங்கல். மகிழ்தல்-பராவணமாகிய அந் நீற்றினே யணிதலால் மும்மலங் கெடுதலாய பயன் நோக்கி உள்ள ந் து யதாய் இன்புறுதல். சிங்காரம். உவகை ; அழகு எனப் பொருள் கூறலுமுண்டு. சிவகதி என்றது. சாலோக சாமீப சாரூபமாகிய பதமுத்திகளே. திருவடிசேர்வர் என்றது இரண்டறக் கலத்தலாகிய சாயுச்சிய முத்தியை.