பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

227


ஞானவேடம்

152. ஞானமிலார் வேடம் பூண்டும் நரகத்தர்

ஞானமுளார் வேடம் இன்றெனின்

நன்முத்தர் ஞான முளதாக வேண்டுவோர் நக்கன்பால் ஞானமுள வேட நண்ணி நிற்பாரே. (1668)

மெய்ஞ்ஞானிகட்கு உண்மையான வேடமாவது மெய்ப் பொருளுணர்வே என வலியுறுத்துகின்றது.

(இ~ள்) மெய்ப்பொருளே இடைவிடாதுனரும் அன் பில்லாதவர்கள் சிவ ஞானியர்க்குரிய வேடத்தைப் பூண்டி ருந்தும் (துன்பமே நுகரும்) நரகத்தை யடைவர். (ஈசன் பால் அன்பாகிய) மெய்யுணர்வுடையோர் சிவஞானிக் குரிய வேடத்தைக் கொண்டிலராயினும் நல்ல வீடு பேற்றினே யடைந்தோராவர். எனவே சிவஞானம் தம் பாலுளதாக வேண்டு என்னும் வேட்கையுடையவர்கள் சிவபெருமானிடத்து அன்பினை விளைவிக்கும் மெய்யுணர் வின் முதிர்ச்சியாகிய செயல்களேயுடைய மெய்ம்மையான வேடத்தைச் சார்ந்து நிற்பாராக எ-று.

ஞானம் என்றது, ஈசன்பால் அன்பினை விளேத்தற் குரிய உணர்வொழுக்கங்களே. ஞானம் ஈசன்பால் அன்பே என்றனர். ஞானமுண்டார் என்பர் சேக்கிழார் நாயனரும். மெய்யுணர்வில்லாத பொய்வேடத்தார் மெய்ந் நெறி சேரமாட்டார் என வலியுறுத்துவார் ஞானமிலார் வேடம்பூண்டும் நரகத்தர் என்ருர் . பூண்டும் என்புழி உம்மை உயர்வுசிறப்பு. இதுகொண்டு ஞானமுளார் வேடம் இன்றெனினும்’ என இழிவு சிறப்பும்மை விரித் துரைக்கப்பட்டது. மெய்யானைத் தன் பக்கல் விரும்பு