பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 திருமந்திரம்

வார்க்கு, விரும்பாத அரும்பாவியவர்கட் கென்றும் பொய் யானே? எனவும் மறந்தானேத் தன்னினையா வஞ்சர் தம்மை’ எனவும் வரும் அப்பர் அருள்மொழிகள் இங்கு நினைக்கத்தக்கன. இறைவன் திருவடியை இறைஞ்சி வழிபடுவாரே ஞானத்தையும் அதனைப் புலப்படுத்தும் மெய் வேடத்தையும் அடையப்பெறுவர் என்பார், ஞானம் உளதாக வேண்டுவோர் நக்கன்பால் ஞானமுள வேடம் நண்ணி நிற்பார் என்ருர். மேவிய வெந்நரகத்திலழுந் தாமை யுயிர்க்கு மெய்ந்நெறியைத் தான்காட்டும் வேத முதலானே? எனப் போற்றுவர் நம்பியாரூரர். நக்கன்-சிவ பெருமான்; நக்னன்-ஆடையிலான்; திசைகளையே ஆடை யாகக் கொண்டவன்; திகம்பரன்.

சிவ வேடம்

சிவவேடமாவது சிவனை நினைப்பிக்கும் அடியார் திரு வேடம். நேயமலிந்தவர் வேடம் என்பர் மெய்கண்டார்.

153. அருளால் அரனுக் கடிமைய தாகிப்

பொருளாந் தனதுடற் பொற்பதி நாடி இருளான தின்றி யிருஞ் செய்லற்றேர் தெருளாம் அடிமைச் சிவவேடத்

தாரே. (1676)

சிவ வேடத்தார் இயல்பு கூறுகின்றது.

(இ-ள்) இறைவன் திருவருளாலே அம் முதல்வனுக்குத் தொண்டராய்ச் செம்பொருளாகிய சிவம் விளங்குதற்கு இடமாகிய தனது உடம்பினுள்ளே இதயமாகிய பொன்னம் பலத்திலே அம்முதல்வனை நாடிக் கண்டு (அதல்ை) ஆணவ விருள் இல்லையா யொழியக் கடிய வினைகள் அற்ற வர்கள் சிந்தையில் தெளிவுடையராய்ச் சிவனுக்கு அடிமை பூண்ட சிவ வேடத்தர் ஆவர் எ-று.