பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

233


என விளக்குவர் மெய்கண்டார். பத்தியே ஞானத்திற்குச் சாதனம் என்பார் பத்தியின் ஞானம் பெறப்பணிந்து? என்ருர். உயிர்கட்கு ஞானத்தை நல்குவது தடையிலா ஞானமாகிய சிவசத்தியே யாதலின் ஞானம் பெற விழை வோன் சத்தியாகிய திருவருளேப் பெறுதற்குப் பெரு வேட்கையுடையதைல் வேண்டும் என்பார் சத்தியில் இச்சைத் தகுவோன் சற்சீடனே ? என்ருர், இச்சைவிருப்பம்.

வைத்தபொருள் நமக்காமென்று சொல்லி மனத்தடைத்துச்

சித்தமொருக்கிச் சிவாய நமவென் றிருக்கினல்லால் மொய்த்த கதிர்மதி போல்வாரவர் பாதிரிப்புலியூர் அத்தன் அருள் பெறலாமே அறிவிலாப் பேதை நெஞ்சே." (4-94-5) எனவரும் திருவிருத்தம் இங்கு மனங்கொளத் தகுவதாகும்.

ஏழாங் தந்திரம்

ஆருதாரம் முதல் இதோபதேசம் ஈருக முப்பத்தெட்டு உட்பிரிவுகளேயுடையது. இதனுட் கூறப்படும் பொருள் களுள் ஆருதார நிலேகள், சிவலிங்க பேதங்கள், அரு ளொளி, குரு லிங்க சங்கம வழிபாடு, ஆதித்தர்வகை, ஐம்பொறிகளே யடக்கும் முறை, சற்குரு, இதோபதேசம் என்பன சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இவை மேற் குறித்த தச காரியங்களுள் சிவரூபம், சிவதரிசனம் என்னும் இரண்டையும் விளக்குவன. போசனவிதி, பிட்சாவிதி, பூரணக் குகைநெறிச் சமாதி, சாமாதிக்கிரியை, விந்துச் சயம் என்பன ஞானம் பெறுதற்குத் துணையாகவுள்ள நல் லொழுக்க நெறிகளே அறிவுறுத்துவன. மூலாதாரம் முதலிய ஆருதாரங்களில் வைத்து அண்டலிங்கம் முதலிய அறு வகை இலிங்கங்களையும் கண்டு வழிபடுதலும், அரு ளொளிக்குள் ஒடுங்கியிருந்து குரு லிங்க சங்கமம் என்னும்