பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 திருமந்திரம்

மூன்றிடங்களிலும் சிவபெருமானே வெளிப்படக் கண்டு வழிபடுதலும் ஆகிய இவை முறையே அகத்திலும் புறத்தி லும் செய்தற்குரிய வழிபாடுகளாகும். ஐந்திந்திரியம் அடக்கும் முறை, கூடாவொழுக்கம் நீத்தல், கேடுகண் டிரங்கல் என்ற பகுதியிலுள்ள மந்திரங்கள் இறைவனே வழிபாடு செய்வோர்பால் குற்றங்கள் இல்லையாதற்கு இன்றியமையாத நற்பண்புகளே விளக்குவன. இறுதியி லுள்ள இதோபதேசம் என்பது உலகமக்களனைவரும் அன்புடன் கடைப்பிடித்தொழுகி உய்திபெறுதற்குரிய நல் லுரைகளேத் தன்னகத்தே கொண்டு திகழ்கின்றது.

ஆருதாரம்

மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்களின் இயல்புகள் அவற்றிலமைந்துள்ள அக்கரங்கள் தெய்வங்கள் ஆதார யோகத்தால் விளேயும் பயன்கள் ஆகியவற்றை உணர்த்தும் பகுதி.

156. நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும்

கோலிமேல் நின்ற குறிகள் பதினறும் மூலங்கண் டாங்கே முடிந்து முதலிரண்டுங் காலங்கண் டானடி காண

மாமே, (1704) இறைவனே யோகநிலையில் உணர்தற்கு நிலேக்களமாகிய ஆதாரங்கள் ஆறின் இயல்பினேக் கூறுகின்றது.

(இ-ள்) நாலிதழ்த் தாமரை வடிவாகிய மூலாதாரமும் ஆறிதழ்த் தாமரை வடிவாகிய சுவாதிட்டானமும், பத் திதழ்த் தாமரை வடிவாகிய மணிபூரகமும், பன்னிரிதழ்த் தாமரை வடிவாகிய அநாகதமும், அவற்றின் மேல் நின்ற பதிறிைதழ்த் தாமரை வடிவாகிய விசுத்தியும் ஆகிய