பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 திருமந்திரம்

மின்னுெளியுடைய முக்கோணம் உளது. அதன் நடுவில் அன்ன நிறமான ஈசன் உள்ளார். அவருடன் காகினி சத்தி எழுந்தருளியுள்ளார். அவர்கள் நடுவில் பொன் மயமான பாணலிங்கமும் தீப மொட்டுப்போன்ற ஹம்ச வுருவில் ஜீவனு உள்ளன . பதுமத்தின் கர்ணிகையின் கீழ்ச் செந்நிறமான எட்டிதழ்த் தாமரையுளது. அதன் நடுவே கற்பக விருட்சம் முதலியவற்ருல் அணிசெய்யப் பெற்ற அகப் பூசைக்குரிய தானு விளங்குகிருர் . இது இதயத் தானம்.

குறிகள் பதினறு-கழுத்தின் அடிக்கண் பதிறிைதழ்த் தாமரை வடிவில் விசுத்தி. செந்நிறமான கேசரங்களே யுடையது. இதன் கர்ணிகையில் வட்ட வடிவினதாகி ஆகாய மண்டலம் உளது. அதன் நடுவில் முக்கோண மும் அதில் சந்திரமண்டலமும் உள்ளன. அதன் நடுவில் சிவபெருமான் மாதொருபாகராக வீற்றிருக்கின்ருர். சிவ பாகம் பொன்னிறம். அம்மைபாகம் வெண்ணிறம். சந்திர மண்டலத்தில் ஸாகினி என்னும் சத்தியுள்ளார்.

முதலிரண்டு-ஈரிதழ்த் தாமரையாகிய ஆஞ்ஞா சக்கரம். கர்ணிகையின் நடுவில் ஹாகினிசத்தி. அதற்குமேல் திரி கோணத்தில் மின்னல் வடிவான இதர என்னும் இலிங்கம். அதற்குமேல் திரிகோணத்தில் பிரணவவடிவான தீபத்தைப் போன்ற அந்தராத்மா . அதற்குமேல் நுண்ணுருவாகிய மனம். அதன்மேல் ஹம்ஸ் வடிவான சிவம். இதற்குரிய இடம் புருவநடு என்பர். இவ்வாறு மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களேயும் முறையே தரிசித்து ஈரிதழ்த் தாமரையாகிய ஆஞ்ஞையில் நிலைபெற்று மூலதா ரமுதல்