பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

237


ஆஞ்ளுைவரை சோதி வடிவாக இறைவனே க் கண்டு வழிபடின் திருவடி ஞானம் பிறக்கும் என்பதாம்.

அண்டலிங்கம்

அண்டம் முழுவதும் சிவலிங்கமாகக் காணும் காட்சி.

157. தாபரத் துண்ணின் றருளவல் லான் சிவன் மாபாத் துண்மை வழிபடு வாரில்லே மா பரத் துண்மை வழிபடு வாளர்க்கும் பூவகத் துள்நின்ற பொற்கொடி

யாமே. (1717) இறைவனே அண்டலிங்கமாகக் கண்டு வழிபடுவார் எய்தும் பயன் கூறுகின்றது.

(இ.ஸ்) நிலேயாகப் பிரதிட்டிக்கப்பெற்ற சிவலிங்கத் திருமேனியில் எழுந்தருளியிருந்து சரியை கிரியை யாள ராகிய அடியார்களுக்கு அருள் வழங்க வல்லவன் சிவ பெருமான். ஆனல் அம் முதல்வன் உலகங்கள் எல்லாவற். றிற்கும் மேலாய் விரிந்து விளங்கும் உண்மையையுணர்ந்து அம் முதல்வனே வழிபட வல்லார் இவ்வுலகத்து அரியர். அங்ங்னம் அண்டமுழுதுமாய் விளங்கும் அவனது பெரு மையை யுணர்ந்து வழிபட வல்ல அருளாளர்க்கும் அவ் விறைவன் அவர்தம் நெஞ்சத் தாமரையுள் பொற்கொடி போல ஒளியுடன் விளங்கி அருள்புரிவன் எ-று.

தா.பரம்-இறைவன் எழுந்தருளும் நிலேயாகத் தாபிக் கப்படும் சிவலிங்கம். சரியை கிரியை நெறிகளில் ஒழுகு வார்க்கு இறைவன் சிவலிங்கத் திருமேனியில் நின்று எளி வந்து அருள் புரியும் இயல்பினன் என்பார், தாபரத்துள் நின்று அருளவல்லான் சிவன் என்ருர், மா பரத்து உண்மை-மேலானவற்றிற் கெல்லாம் மிக மேலான ஞான