பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 திருமந்திரம்

தேடிக் கண்டுகொண்டேன் திருமாலொடு நான்முகனுத்

தேடித் தேடொளுத் தேவனை யென்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேன் ? (4-8-12)

எனவருந் திருப்பாட்டும் ஆன்மலிங்க வழிபாட்டினைக் குறிப்பால் உணர்த்தி நிற்றல் காணலாம். மனமணி யிலிங்கமாகப் பூசனை யீசனுர்க்குப் போற்ற விக் காட்டி ைேமே என்பதும் இங்கு நினைத்தற்குரியதாகும்.

ஞான லிங்கம்

ஆன்மாபெற்றுள்ள சிவஞானத்தையே சிவலிங்கத் திருமேனியாகக் கொண்டு வழிபடுமாறு கூறுகின்றது.

161. ஆதிபரந் தெய்வம் அண்டத்து நற்றெய்வம் சோதி யடியார் தொடரும் பெருந்தெய்வம் நீதியுள் மாதெய்வம் நின்மலன் எம்மிறை பாதியுள் மன்னும் பராசத்தி யாமே. (1767)

ஞானலிங்கத்தின் இயல்புணர்த்துகின்றது.

(இ-ள்) எல்லாவற்றையும் தோற்றுவித்தற்கு முன்னன மேலாகிய பரம்பொருளும், அண்டப் பொருள்களில் ஒன்ருய்க் கலந்து நலம்புரியும் தெய்வமும், சோதிப்பொரு ளாய் உயிருடன் ஒட்டி நின்று அன்புடைய அடியார் களால் தொடரப்பட்டுப் பத்திவலேயுட் படுத்தப்பெறும் பெருங் கடவுளும், நீதியுள் பிரிவின்றி விளங்கும் பெருமை யுடைய தெய்வமும், குற்றமற்ற துரியோனும் ஆகிய எம்பெருமான் தன் ஒருபாகத்துள் விளங்கும் பரா சத்தி யாகிய சிவஞானத்தினையே தனது திருவுருவாகக் கொண்டு விளங்குவான் எ-று.