பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

 பதினேழு மொழிகளையும் சேர்த்துப் பதினெண் மொழிகள் என வழங்கும் வழக்கம் தொல்காப்பியத்திலும் சங்க நூல்களிலும் காணப்படவில்லை. அன்றியும் திருமந்திரத்தில் திருவள்ளுவர் அருளிய திருக்குறளின் தொடர்களும் பொருள்களும் அவ்வாறே எடுத்தாளப் பெற்றுள்ளன. திருமூலர், தம் காலத்தில் நிலவிய தமிழ்நாட்டின் பகுப்பினைத் ‘தமிழ் மண்டலம் ஐந்து’ எனக் குறித்துள்ளார். தமிழ்நாடு சேரமண்டலம், பாண்டி மண்டலம், சோழ மண்டலம், தொண்டை மண்டலம், கொங்கு மண்டலம் என ஐந்து மண்டலங்களாகப் பிரிந்து தனித்தனி ஆட்சியில் நிலைபெற்ற காலம் கடைச்சங்க காலத்திற்குப் பின் கி. பி. மூன்றாம் நூற்றண்டினை யொட்டியதாகும். தில்லையிற் கூத்தப்பெருமான் அருட்கூத்தியற்றும் திருவம்பலத்திற்கு முதன்முதற் பொன் வேய்ந்து அதனைப் பொன்னம்பல மாகத் திருப்பணி செய்தவன் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லவ மன்னனாகிய சிம்மவர்மன் என்பர் அறிஞர். எனவே அவ்வேந்தனாற் பொன் வேயப்பெற்ற திருவம்பலத்தைப் பொன்னம்பலம் என்ற பெயராற் போற்றிய திருமூலநாயனார் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியிலோ அன்றி ஆறாம் நூற்றண்டின் முற்பகுதியிலோ இந் நூலினை நிறைவு செய்திருத்தல் வேண்டும் எனக் கருதுதல் ஏற்புடையதாகும்.

திருமூலநாயனர் இந் நிலவுலகில் மூவாயிரம் ஆண்டு சிவயோகத்து அமர்ந்திருந்து தமிழ் மூவாயிரம் ஆகிய திருமந்திரமாலையைப் பாடியருளினார் எனச் சேக்கிழார் நாயனார் கூறுதலால், திருமூலர் திருவாவடுதுறையிற் சிவபோதியாகிய படரரசின்கீழ்ச் சிவயோகத்தமர்ந்த காலம் கி. பி. ஐந்தாம் நூற்ருண்டுக்குப் பன்னூறாண்டுகள் முற்பட்டதாகும். எண்ணிலி காலம் சிவயோக நிலையில் அமர்ந்த அத் தவமுனிவர் கடைச்சங்கம் நிலவிய காலப்