பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 திருமந்திரம்

உடம்பெனு மனையகத்துள் உள்ளமே தகளியாக மடம்படு முனர் நெய்யட்டி யுயிரெனுந் திரிமயக்கி இடம்படு ஞானத்தியால் எரிகொள இருந்துநோக்கில் கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே. (4-75-4) எனத் திருநாவுக்கரசரும் அருளிய பொருளுரைகளால் இனிதுணரலாம். இனி இரண்டாமடியில் விளக்கு என்றது இறைவனது அருளொளியினை. மெய் கிளரும் ஞானவிளக்குக் கண்டாய். (6.23-2) துரண்டா விளக்கின் சுடரனே யாய்? எனவும் ஒளிவளர் விளக்கே? எனவும் அருளாளர் இறைவனே விளக்காக அழைத்தமை காணலாம். வேதனை-மலங்களால் விளையும் துன்பம். மாறும்-நீங்கும். மூன்றமடியின் முதற்கண் விளக்கு என்றது உயிரறிவின. அவ்விளக்கை விளக்கும் விளக்காவது இறைவனருளாகிய சுடரொளி. அதனையுடையவர்கள் என்றது, அவ்வொளி உள்ளும் புறம்புந் தோன்றப்பெறும் அருளாளர்களே. அன் னேர் சோதியும் சுடரும் சூழொளி விளக்கும் ஆகிய அவ் வொளியில்ை உள்ளும் புறம்பும் ஒரு தன்மைக் காட்சிய ராய் விளங்கும் நன்ஞானம் பெற்று ஆணவ விருள் நீங்க ஈறில் பெருஞ்சோதியினிற் பிரிவறக் கலந்து ஒளிரும் சுடர் விளக்காகத் திகழ்வர் என்பார், விளக்கை விளக்கும் விளக்குடையார்கள், விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே? என்றருளிச்செய்தார்,

'இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச் சிவாயவே: (4-1 1-8) என்பது அப்பர் அருண்மொழி.