பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 திருமந்திரம்

(இ-ள்) பேரருள் வள்ளலாகிய இறைவர்க்கு மக்களது ஊனுடம்பே கோயில் வளாகமாகிய ஆலயமாகும். உள்ளமே அம்முதல்வன் வீற்றிருந்தருளும் கருப்ப இல்லா கிய பெருங் கோயிலாகும். அவ்வாலயத்தின் கோபுர வாசலாகத் திகழ்வது வாயாகும். இறைவனே வழிபட்டுப் போற்றும் முறையினைத் தெளிவாக வுணர்ந்த சிவஞானி யர்க்கு அவர்தம் ஆன்மாவே இறைவனே ஆவாகித்துப் பூசித்தற்கேற்ற சிவலிங்கத் திருமேனியாகும். வஞ்சனையை விளேக்கும் ஐம்புலன்களும் அடங்கிய நிலேயே அவ் வழி பாட்டுக்குரிய உள் ஒளியினத்தரும் திணிந்த இரத்தின தீபமாம் எ-று.

உள்ளம் - மனம். ஊனுடம்பு - ஊலைாகிய உடம்பு. வள்ளற்பிரான்-கைம்மாறு கருதாது எல்லாவுயிர்க்கும் பேர ருள் வழங்கும் பெருமாகிைய இறைவன். தெள்ளத் தெளி தல் - ஐயந்திரியின்றி மெய்ப்பொருளேத் தெளிந்துணர்தல். கள்ளப்புலன் ஐந்து-உயிர்க்குயிராகிய இறைவன நினைய வொட்டாது உயிரை வஞ்சித்துப் புறத்தே யீர்த்துச் செலுத் தும் ஜம்புலன்கள். காளாமணி விளக்கு-நன்கு முதிர்ச்சி பெற்றுத் திணிந்த மாணிக்க விளக்கு. காழ் ஆம் மணி விளக்கு என்க. காழா மணி விளக்கு காளா மணி விளக்கு என ழகரம் ளகரமாய் மருவி வழங்கிற்று. அகப் பூசை யாகிய இதன் இயல்பினை,

காயமே கோயிலாகக் கடிமணம் அடிமையாக வாய்மையே தூய்மையாக மனமணி யிலிங்கமாக நேயமே நெய்யும் பாலா நிறையநீரமைய வாட்டிப் பூசனை யீசஞர்க்குப் போற்றவிக் காட்டிளுேமே?” எனவும்,