பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

255


  • உயிராவண மிருந் துற்று நோக்கி

யுள்ளக் கிழியி னுருவெழுதி

உயிராவணஞ் செய்திட் டுன்கைத்தந்தார்

உணரப் படுவாரோ டொட்டி வாழ்தி ?

எனவும் வரும் திருமுறைப் பனுவல்களால் உணரலாம்.

168. புண் ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு

நீருண்டு அண்ணல் அதுகண் டருள்புரியா நிற்கும் எண்ணிலி பாவிகள் எம்மிறை யீசனே. நண்ணறி யாமல் நழுவுகின் ருரே, (1828)

சிவபூசையின் இன்றியமையாமையும் யாவர்க்கும் இயலுந் திறமும் செய்யாதாரது இழிவும் உணர்த்துகின்றது.

(இ-ள்) புண்ணியமாகிய சிவபூசையினைச் செய் வார்க்கு இன்றியமையாத சாதனமாகிய பூவும் உண்டு நீரும் உண்டு. இறைவனுகிய சிவபெருமான் அன்பர் செய்யும் அப்பூசையின் அன்பின் திறத்தைக் கண்டு அன்ைேர்க்கு இடைவிடாது அருள்புரிகின்றன். அம்முதல் வனது இருப்பினை எண்ணுதலின்றித் தீச்செயல் செய்யும் கொடியோர்கள் எம் இறைவனகிய ஈசனை இப்பூசனையால் எளிதில் அடைய அறியாமல் அறநெறியினே விட்டு இடை யில் வழுவிச் செல்கின்றர்கள். (அந்தோ அவர்தம் அறி யாமை இருந்தவாறென்னே) எ-று.

இறைவனைப் பூசித்தற்குப் பெருமுயற்சி செய்தலின்றிப் பூவும் நீரும் எளிதிற்கிடைக்கின்றன. பேரருளாளகிைய இறைவனே எவ்வகையாலும் தன்னே அன்பினுல் நினேப் பாரை எதிர்பார்த்து அருள் வழங்கக் காத்திருக்கின்றன். இவ்வுண்மை யறியாமல் உலகில் தீமையே செய்தொழுகு