பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 திருமந்திரம்

பஃருெடை முதலிய பனுவல்களால் சிவமாகப் போற்றிய திறமும் இங்கு மனங்கொளத் தக்கனவாகும்.

மகேசுவர பூசை

சிவனடியார்களேச் சிவனெனவே கண்டு வழிபடும் திறம்.

170. படமாடக் கோயிற் பகவற்கொன் றீயின்

நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா நடமாடக் கோயில் நம்பர்க் கொன்றீயிற் படமாடக் கோயிற் பகவற்க தாமே. (1857)

அரன் பூசையினும் அடியார் பூசையே மிக்க பயன் விளேத்தல் உணர்த்துகின்றது.

(இ-ள்) படத்தில் உருவமைக்கப்பெற்ற மாடங்களே யுடைய கோயிலுள் திருமேனிகொண்டு எழுந்தருளியிருக் கும் பகவனகிய இறைவனுக்கு அன்பினால் ஒரு பொருளேக் கொடுத்தால் அப்பொருள் நடத்தலேயுடைய மக்களுடம் பாகிய மாடக்கோயிலில் எழுந்தருளிய விரும்பத்தக்க இறைவர்களாகிய அடியார்க்குப் பயன்தருதலில்லே . நட மாடக் கோயில் நம்பர்களாகிய அடியார்களுக்கு ஒரு பொருளேத் தந்தால் அப்பொருள் அடியார்களுக்கேயன்றி அவர்தம் உயிர்க்குயிராய் விளங்கும் படமாடக் கோயிற் பகவனகிய இறைவனுக்கும் ஒரு சேர உவப்பினை விளேத் துப் பயன்தரும் பொருளாகும் எ - று.

படம் - இறைவன் திருவுருவினை எழுதுதற் குரிய துணி. கோயில்கட்டி இறைவனே வைத்து வழிபாடுசெய் வோர் தாம் அமைக்க எண்ணிய கோயிலையும் அங்கு திலேபெறுதற்குரிய திருமேனியையும் முதற்கண் படத்தி லெழுதியமைத்து வழிபடும் மரபுபற்றிப் படமாடக் கோயிற்