பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 திருமந்திரம்

ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே, ஏ.யும் உயிர், மாமாயை ஈன்றிட, மாயை கைத்தாயாகக் கேவலத்தின் (நீங்கிச்) சகலத்தெய்தி ஆய்தரு சுத்தமும் தான் வந்தடை யும் என இயையும். மாமாயை-சுத்தமாயை. மாயைஅசுத்தமாயை. கைத்தாய்-செவிலித் தாய்.

195. பொன்னே மறைத்தது பொன்னணி பூடணம்

பொன் னின் மறைந்தது பொன்னணி

பூடணம்

தன்னை மறைத்தது தன் கர ணங்களாந்

தன்னின் மறைந்தது தன் கர

ணங்களே. (2289)

ஆன்ம தரிசனம் செய்யும் உபாயம் உணர்த்துகின்றது.

(இ-ள்) பொன்லிையன்ற அழகிய அணிகலம் அணி கலமாகத் தன்னைக் காண்பார்க்குத் தனக்கு முதற்காரன மாகியது பொன் என்னுந் தன்மையினே உலகத்தார் காணுதவாறு வினைத்திறத்தால் ೧೬r 65 ಔr மறைத்தது . அணிகலத்தில் மேற்பட்டுத் தோன்றும் தொழில் நுட்பத் திற் கருத்தின்றி முதற் காரணமாவது யாது எனக் கூர்ந் துண்ர்வார்க்கு அணிகலம் தனித்துத் தோன் ருது பொன் னெனவே அதற்குள் அடங்கி மறைந்தது. அதுபோல, ஆன்மாவாகிய தன்னை மறைத்தது தன் கரணங்களாகிய மாயேயம். (நானுர் என்னுள்ள மார் எனக்கூர்ந்து நோக் கிய நிலையில்) தன் கருவி கரணங்களாகிய அத்தொகுதி ஆன்மா மேற்பட்டுத் தோன்ற அதன் வியாபகத்துள் அடங்கி மறைந்தது எ-று.

ஆன்மா தனுகரணங்களே தானகப் பேதமின்றி எண்ணிய நிலையில் ஆன்மா என்னும் முதற் பொருள்