பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 திருமந்திரம்

வியாபகமே மேற்பட நிலமுதலிய இப்பிரபஞ்சம் அசத்துப் பொருளாய் அதனுள் மறைந்துவிடும் எ~று.

அசத்தின் வழி நின்று காண்பார்க்குச் சத்தாகிய

பரம்பொருள் காணப்பெருது. சத்தின் வழி நின்று காண் பார்க்கு அசத்தாகிய பிரபஞ்சம் காட்சிப்படாது என்பது கருத்து.

"பரஞானத்தாற் பரத்தைத் தரிசித்தோர் பரமே

பார்த்திருப்பார் பதார்த்தங்கள் பாரார்

சிவன்முத்தர் சிவமே கண்டிருப்பர்’ (311)

என்ருர் அருணந்தி சிவனரும்.

அறிவுதயம்

197. தன்னை யறியத் தனக்கொரு கேடில்லே

தன்னை யறியாமற் ருனேகெடு கின்ருன் தன்னே யறியு மறிவை யறிந்தபின் தன்னேயே யர்ச்சிக்கத் தானிருந்

தானே, (2355)

தன்னையறிதலால் வரும் பயன் உணர்த்துகின்றது.

(இ-ள்) ஆன்மா தனது இயல்பை உள்ளவாறு அறிந்து கொள்ளுதலால் தனக்கு வரக்கடவதொரு தீங்குமில்லே. ஆன்மா தன்னியல்பை உள்ளவாறுணராமையினலேயே தானே (வாழ்க்கைப் பயனையிழந்து) கெடுகின்றன். தனதியல்பினை உள்ளவாறறிதற்கு ஏதுவாகிய சிவ ஞானத்தைத் தந்தருளும் இறைவனே அறிந்தபின்பு தன் தலைவனுகிய இறைவனேயே பூசிக்கத் தான் அவனுடன் பிரிப்பின்றியிருத்தலாகிய பேரின்ப நிலையைப் பெறு கின்ருன் எ-று.