பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 திருமந்திரம்

மூவகைக் குற்றங்களும் கெட மெய்யுணர்வின் பயன எய்துமாறு கூறுகின்றது .

(இ-ள்) விழைவு, வெறுப்பு, அவிச்சை என்னும் இக் குற்றங்கள் மூன்றனயும் நீக்கிப் பாதுகாவலாயுள்ள மெய்ப் பொருளைச் சிக்கெனப் பிடித்திருந்த எளியேனுக்கு (உள்ளி ருந்து) ஒலிக்கும் மணியாய் ஒம் என்னும் பிரணவ ஓசை யினுள்ளே தங்கியதோர் ஒளிப்பிழம்பினை எய்தப்பெற்றமை எண்ணி இன்புறத்தகுவதாம். எ-று .

நில்லாதவற்றை நிலையினவென்றும் அசுத்தத்தைச் சுத்தமென்றும் துன்பத்தை இன்பமென்றும் தானல்லாத, பொருளேத் தானென்றும் திரியக் காணும் உணர்வாகிய அவிச்சையும், அதுபற்றி அவற்றை யானென மதிக்கும். அகங்காரமும், அதுபற்றி எனக்கு இது வேண்டும் என்னும் அவாவும், அதுபற்றி அப்பொருட்கட் செல்லும் ஆசையும், அதுபற்றி அதன் மறுதலேக்கண் செல்லும் வெகுளியும் எனக் குற்றங்கள் ஐந்தாகும் என்பர் வடநூலார். அவற். றுள் அகங்காரம் அவிச்சையிலும் அவாவுதல் ஆசையிலும் அடங்குதலால் குற்றங்கள் மூன்ருயின.

காமம் வெகுளி மயக்க மிவை மூன்றன் நாமங் கெடக் கெடும் நோய்? (360)

என்ருர் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனரும். மூலப் பகுதியினுளவாகிய பும்ஸ்துவமலமாகிய இக்குற்றங்கள் நீங்குதலே புருடதத்துவத்திற்குச் சுத்தியாகும். இச்சுத்தி மூலப்பகுதியைச் சுத்தி செய்த பின்னரே நிகழ்வதாகும். காரணமாகிய இக்குற்றங்களைக் கடிந்தார் காரியமாகிய இருவினைகளைச் செய்யாமையின் எல்லாப் பொருட்குஞ் சார்பாகிய செம்பொருளைப்பற்றி இன்புறுவர் என்பார், 'இவை கடிந்து ஏமம் பிடித்திருந்தேனுக்கு என்ருர்.