பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு 3 5

ஆய் அன்ன-தாயினை யொத்த 'தாய்போல் தலே யளித்திட்டு என்பது திருவாசகம். வாயன் நம் நந்தி எனவும் காயன் நம் நந்தி எனவும் சேயன் நம் நந்தி எனவும் மகரவொற்று விரித்துப் பொருள் கொள்க. காயம்உடம்பு. காயத்தன் எனற்பாலது அம்மீறுகெட்டுக் காயன் என்ரு யிற்று; வேதத்தன் எனற்பாலது வேதன் என வழங்குதல் இங்கு ஒப்புநோக்கற் பாலதாகும். சேயன். சிந்தைக்கும் மொழிக்குஞ் சேய்மையானவன். வாழ்த்து வார் வாயிடத்தான் என்பார் வாயன் என்ருர். வாழ்த்து வார் வா யானே? என்பது அப்பர் அருள்மொழி. இறைவன் உயிர்களின் உடம்பிலும் கலந்துள்ளமை மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான் எனவும் இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய்” எனவும் வரும் அருளிச் செயல்களாற் புலம்ை.

வாழ்த்து வாயும் நினைக்கு மடநெஞ்சுத்

தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவன? எனவும்;

வணங்கத் தலைவைத்து வார்கழல் வாய்வாழ்த்தவைத்

திணங்கத்தன் சீரடியார் கூட்டமும் வைத்து’ எனவும்

சிந்தனை செய்யமனம் அமைத்தேன்

செப்ப நாவமைத்தேன்

வந்தனை செய்யத் தலையமைத்தேன்

கைதொழ வமைத்தேன்

ந்ெதனை செய்வதற் கன்பமைத்தேன்

மெய்யரும்ப வைத்தேன்

வெந்து வெண்ணிறணி யீசற்

கிவையான் விதித்தனவே. (பொன்-92)

எனவும் வரும் திருமுறைகள் இங்கு ஒப்புநோக்கத்தக்கன.