பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 திருமந்திரம்

என வரும் கருவூர்த்தேவர் திருவிசைப்பாஇனிது உணர்த்து கின்றது .

எங்ங் கிறைவனுள னென்பாய் மனனேயான்

எங்ங் கெனத்திரிவாரின் ? எனவரும் மேற்கோளும் இதனையே வலியுறுத்தும். சிவ ஞானத் தெளிவுடையார் சிந்தையிலே இறைவன் வெளிப் பட்டுத் தோன்றுவன் என்னும் உண்மையின,

சிந்தையும் தெளிவுமாகித் தெளிவினுட்சிவமுமாகி: எனவரும் அப்பர் தேவாரம் இனிது விளக்குகின்றது.

சிவசொரூபதரிசனம்

229, உணர்வும் அவனே உயிரும் அவனே

புணரும் அவனே புலவி அவனே இணரும் அவன்தன்னை எண்ணலு மாகான் துணரின் மலர்க்கந்தம் துன்னி நின் ருனே.

(2857) சிவபெருமானது உண்மை இயல்பினே உணர்த்துகின்றது.

(இ-ள்) உயிருணர்வில் விளங்குபவனும் அவ்விறை வனே. அவ்வுணர்வினைத் தோற்றுவித்து உயிரில் இருப்ப வனும் அவனே. எல்லாப் பொருள்களோடும் பிரிவின்றிப் புணர்ந்திருப்பவனும் அவனே. அவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றி அவற்றில் தோயாது பிரிந்திருப்பவனும் அவனே. பூங்கொத்தினைப் போன்று எப்பொருளும் தன் கண்பூத்து விளங்குதற்கு ஆதாரமாயுள்ள அவ்விறைவன் தன்னே உயிர்கள் சிந்தித்துணர்தற்கு இயலாதவாறு அப் பாற்பட்டுள்ளான். (ஆயினும்) கொத்தாய் மலர்ந்த பூக்களிடத்தே உள்ளிருந்து தோன்றும் நறுமணத்தினேப் போன்று எவ்வுயிர்க்கும் உள்ளிருந்து தோன்றும் சிறப் பினையுடையய்ை மாருது நிலைபெற்றுள்ளான். எ-று.