பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

333


'கந்தழியாவது ஒரு பற்றுமற்று அருவாய்த் தானே நிற்கும் தத்துவங் கடந்த பொருள்... ..... இதனே உற்ற வாக்கையின் உறுபொருள் நறுமலர் எழுதரு நாற்றம் போல், பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள்? என அதனை உணர்ந்தோர் கூறியவாற்ருன் உணர்க: என்பர் நச்சிர்ைக்கினியர். இக்கருத்தினேயே துணரின் மலர்க் கந்தம் துன்னிநின்றனே என இத்திருமந்திரம் விளக்கு கின்றது. இணர், துணர்-பூங்கொத்து . கந்தம்-மணம். துன்னுதல்-பிரிவின் றிச் சேர்தல்.

சூனிய சம்பாஷணை மறைபொருள் உரையாடல், 280. பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு

மேய்ப்பாரை யின்றி வெறித்துத் திரிவன மேய்ப்பாரும் உண்டாய் வெறியும்

அடங்கிற்ை பார்ப்பான் பசுஐந்தும் பாலாச்

சொரியுமே. (2883) ஐம்பொறிகளாற் பயன்கொள்ளுமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) பொருள்களே யுணர்ந்து பார்க்கும் அறிவுடைய ஆன்மாவினிடத்திலே பயனேத்தரும் பொறிகளாகிய பசுக் கள் ஐந்துள்ளன. அவை நற்புலத்திலே மேய்ப்பாராகிய குருவைப் பெருது உலக போகங்களில் மருண்டு திரிகின் றன. அவற்றை மேய்க்கும் குருவின் தொடர்புண்டாகி அவற்றின் மருட்சியும் நீங்கில்ை உயிர்க்குரிய ஐம்பொறி களும் நற்பயணுகிய இன்பத்தையே உயிர்கட்கு நல்குவன

எ-று .

பார்ப்பான்-ஆன்மா. பசு-ஐம்பொறிகள். மேய்ப்பான். குரு. வெறி-உலகப் பொருள்களிற் செல்லும் மருட்சி. பால். நல்லுணர்வு.