பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 திருமந்திரம்

238, ஒன்று கண்டீர் உலகுக்கொரு தெய்வமும்

ஒன்று கண்டீர் உலகுக்குயி ராவது நன்று கண்டீர் இனி நமச்சிவாயப்பழம் தின்று கண்டேற்கிது தித்த வாறே. (2962) இதுவும் அது .

(இ-ள்) உலகத்திற்கு ஒப்பற்ற தெய்வமும் ஒன்றே யென்று உணர்வீராக. உலகத்துக்கு உயிராய் உள் நின்று இயக்குவதும் அஃதென்றுணர்வீர். இனி எக்காலத்தும் நமக்கு நலம் விளேப்பதும் அத்தெய்வமே எனக் கண்டுணர் வீராக. (அப்பொருளேக் குறிக்கும்) நமசிவாய மந்திர மாகிய பழத்தினைத் தின்று அதன் சுவையாகிய பரம் பொருளேக் கண்டுணர்ந்தேளுகிய எனக்குச் சிவபரம் பொருளாகிய இப்பொருள் தித்திப்பினையுடையதாய் அண் ணித்ததிறம் மிகவும் இனியதாகும். எ-று.

ஒரு தெய்வம்-ஒப்பற்ற பரம்பொருள். ஒரு தெய்வமும் உலகுக்கு ஒன்று கண்டீர் என்றது, உலகுக்கு முதன்மை யுடைய பொருளாக இரண்டாவதாக எண்ணக் கூடியது எதுவுமில்லை என்பதாம். ஒருவனே தேவனும்’ என முன்னும் அருளிச் செய்தமை காண்க. உலகுக்கு உயிரா வது-உலகுயிர்களே உயிர்க்குயிராய் உள் நின்று இயக்குவது: நன்று-நலம் விளப்பது. நமச்சி வாயப்பழம்-திரு ைவந் தெழுத்தாகிய தீங்கனி; நாவிற் சுவைத்தோர்க்குப் பிறவிப் பிணி நீக்கும் சுவையினை யுடையதாய் அண்ணித்திடடு அமுதூறலின் 'நமச்சிவாயப்பழம் என்ருர் . திருவைந் தெழுத்து மந்திரம் பழமும் அதன் உட் பொருளாகிய சிவம் சுவையும் ஆதல் காண்க. அரன் கழ லணேந்தோராகிய சீவன் முத்தர்கள் தாம் உடம்போடு கூடியுள்ள நிலேயில் பழைய வினை வாசனை தம்மைத் தாக்காது அகலுதல் வேண்டித் திருவைந்தெழுத்தினை விதிப்படி தம் உள் ளத்