பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



குருபாதம்

திருக்கயிலாய பரம்பரை

தருமையாதீனம் இருபத்தாறாம் பட்டத்தில்

எழுந்தருளியிருக்கும் குருமகாசந்நிதானம்

ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாசார்ய

சுவாமிகள் அருளிய

வா ழ் த் து ரை


 
ஞாலம் நின் புகழே மிகவே ண் டும் தென்

ஆலவாயில் உறையும் எம்ஆதியே:

‘சைவ சமயம்’ எனப்படுகின்ற சிவநெறியின் சிறப்பை மக்கள் எளிதில் உணரச் செய்வன பன்னிரு திருமுறைகளாகும். இவைகளை இறைவனே உலகிற்கு அருளினான் என்பது, இவற்றின் ஆசிரியர்களது வரலாற்றால் நன்கு அறியப்படும் .

பன்னிரு திருமுறைகளில் முதற்கண் உள்ள எட்டினை அருளிச் செய்தவர்கள் சமயாசாரியர் நால்வருமாவர். அவருள் திருஞானசம்பந்தர் நம்மைப்போல வினை காரணமாக இவ்வுலகில் வந்து பிறவாது, இறைவனது திருவருளாலே விடுக்கப் பெற்றுத் திருவவதாரம் செய்தமையை ‘திருந்தடி-மறக்குமா றிலாத என்னை மையல் செய்து மண்ணின்மேல் - பிறக்குமாறு காட்டினாய்’ என்று அவரே அருளிச் செய்தமையால் விளங்குகின்றது .