பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv


“முன்னமே முனியாகி நமை அடையத் தவம் முயன்றான்” என்னும் பெரிய புராணத்தால் முற்பிறப்பிலேயே இறைவனை அடையற்பாலராகிய ஒருவரையே இறைவன் திருநாவுக்கரசராக உலகிற்குத் தந்தருளினான் என்பது அறியப்படுகின்றது. சுந்தரரது வருகை திருவருளாலே நிகழ்ந்தமை நன்கறியப்பட்டது. “நீக்கி முன் எனத் தன்னோடு நிலா வகை குரம்பையில் புகப்பெய்து” என்னும் திருவாசகப் பகுதியால், மாணிக்கவாசகரது திருவவதாரச் சிறப்பும் இனிது விளங்கும்.

இந்நால்வரும் அருளிச் செய்த தேவார திருவாசகங்களாகிய எட்டுத் திருமுறைகளோடு ஒத்த பெருமையுடையது, திருமூலர் அருளிச்செய்த திருமந்திரமாகிய பத்தாந் திருமுறை. இதனே அருளிச் செய்வதற்காகவே இறைவன் இதன் ஆசிரியராகிய சிவயோகியாரை அவரது உடம்பை மறைத்து மூலன் உடம்பில் நிறுத்தித் திருவாவடுதுறையிலே இருக்கச் செய்தான் என்பது அவரது திருவாக்கினாலே நன்கு தெளிவாகின்றது.

சமயாசாரியர்கள் அருளிச் செய்த தேவார திருவாசகங்கள் தோத்திரங்களாய் நிற்க, திருமூலர் அருளிச்செய்த திருமந்திரம் சாத்திரமாய்ச் சைவ சமயத்தின் உண்மை, ஒழுக்கம், பயன் முதலியவற்றை நன்கு விளக்கி நிற்கின்றது. ‘வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத் துறை விளங்க’ என்ற சேக்கிழார் திருவாக்கால், வேதநெறியில் விளங்கும் பல துறைகளாகிய சமயங்களுள் சைவம் மேலானதுறை என்பது தெளிவுறும்.

வடமொழி வேதம் மக்கட்குப் பொதுவான அறங்களை முறைப்படுத்திச் சொல்வது. அவ்வேதத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற அறங்கள் சைவம், வைணவம் முதலிய பல