பக்கம்:திருமந்திர ஆராய்ச்சியும் ஒப்புமைப் பகுதியும்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

8 எட்டாந் தந்திரத்தில் - அவத்தைகள், வாய்மை, அவா அறுத்தல், பத்தி, முத்தி முதலியனவும், ஒன்பதாந் தந்திரத்தில் - பஞ்சாட்சரம், சிவ தரிசனம், சூனிய சம்பாஷணை, தோத்திரம் முதலியனவும் கூறப்பட் டுள்ளன. குனிய சம்பாஷணை என்பது எளிதில் பொருள் விளங் காதனவாய்க் குரு மூலமாகப் பொருள் காண வேண்டியனவா யுள்ள பாடல்களைக் கொண்டது. படிக்க வேடிக்கையா யிருக் கும்; உதாரணமாகக் கீழ்க் காட்டியுள்ள பாடலக் காண்க : வழுதலை வித்திடப் பாகல் முளேத்தது புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது தொழுதுகொண் டோடினர் தோட்டக் குடிகள் முழுதும் பழுத்தது வாழைக் கனியே-2869 [ வழுதலே வித்து-யோகப்பயிற்சி : பாகல்-வைராக்கியம் ; புழுதியைத் தோண்டினேன்-தத்துவ ஆராய்ச்சி செய்தேன் : பூசணி பூத்தது-சிவம் வெளிப்பட்டது தோட்டக் குடிகள்இந்திரியாதி விடயங்கள் , பழுத்தது-கிடைத்தது; வாழைக்கனிஆன்ம லாபம்' இது சைவப் பெரியார் துடிசைகிழார் எழுதி யுள்ள உரைக் குறிப்பு.) பிற நூல்களிற் போலவே திருமந்திரத்திலும் இடைச் செருகலான சில பாடல்கள் உள்ளன, சில பாடல்கள் இரு முறை, மும்முறை வந்துள்ளன ; எடுத்துக் காட்டாக-448-8011; 490-2012-3024; எண்ணுள்ள பாடல்களைப் பார்க்கவும். இவை கள் நன்கு ஆயப்பட்டு இப்பதிப்பிலும் சைவசித்தாந்த மகா சமாஜப் பதிப்பிலும் காட்டப்பட்டுள; ைச வ ப் பெரியார் துடிசைகிழாரது பதிப்பில் திருத்தப்பட்டுள. மனப்பாடஞ் செயத் தகுந்தன மனப்பாடஞ் செயத் தகுந்த பல பாடல்களும் பாடற் பகுதி களும் இந்நாலில் உள்ளன: அவற்றுட் சிறந்தன. சில எடுத்துக் காட்டுவாம் :