பக்கம்:திருமந்திர ஆராய்ச்சியும் ஒப்புமைப் பகுதியும்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

14 சக்கர வர்த்தி தவராச யோகியெனும் மிக்கதிரு மூலனருள் மேவுநா ளெங்காளோ எனத் திருமூலர் பெருமையையும் மிக அருமையாகப் பாராட்டி யுள்ளார். wi. அருளேயர் அருள் வாக்கிய அகவலில் - மூலன் மரபின் முளைத்த மெளனிதன் பாலன்யா னெனவும் பரிவொடும் பகர்ந்தோன் எனத் தாயுமானவரைத் து தி க் த இடத்துத் திருமூலரைக் குறித்துள்ளார். ix திருக்குறள், நான்மறை, தேவாரம் முனிமொழி, திருக் கோவையார், திருவாசகம் இவையெலாம் உயரிய, ஒத்த, இணை யிலாப் பொருள் ஒன்றையே குறிப்பன என்பதற்கு தேவர் குறளும் திருகான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர் என்னும் ஒளவையார் அருளிய நல்வழிச் செய்யுளே தக்க சான்ரும். திருக்குறள் முப்பால் செப்பி, என்றும் தேன்பிலிற்றும் தன்மையதாய் விளங்குகின்றது : திருமந்திரம் காற்பாலும் நவின்று என்றும் தேன்பிலிற்றும் பெற்றியதாய்ப் பொலி கின்றது. இந்நூலின் அருமை, பெருமை தெரிந்தே சித்தார்த தீபிகை, செந்தமிழ் முதலிய பத்திரிகைகளில் இந்நூலிலுள்ள செய்யுள்கள் சில உரை எழுதப் பெற்றன ; சில ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பெற்றன ; அண்மையில்-மாம்பக்கம்-குருகுல ஆசிரியர் திரு. இளவழகனர் அவர்களைக்கொண்டு. திருமந்திரப் பாடற் பொருள் விளக்கச் சொற்பொழிவுகளும் சென்னையில் நடந்தேறின. இத்தகைய அருமை பெருமை வாய்ந்த இந்நூல் திருப்பனந்தாள் ருரீ-ல-புரீ சுவாமிநாத சுவாமிகள் அவர்களின்