பக்கம்:திருமந்திர ஆராய்ச்சியும் ஒப்புமைப் பகுதியும்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

2 வாக்கினின்றும் பிரான் ' என்னும் சொல்லின் சிறப்புப் பெறப் படும். இத்தகைய சிறப்புப் பெயரைச் சம்பந்தருக்கும் திரு மூலருக்குமே குட்டினர் ஆரூரர் என்ருல் ஆளுரருக்குத் திரு மூலர்பால் இருந்த மதிப்பு எப்பெற்றியது என்பது கன்கு தெரி கின்றது. யோக நெறியைப் புலப்படுத்த வந்த நம்பி ஆரூரர் தவராஜ யோகியாகிய திருமூலரை நம் பிரான் ' என வியந்து போற்ருது வேறு எவ்வாறுதான் போற்றக் கூடும் ! ஆரூரருக்குப் பின்னர் வந்த நம்பியாண்டார் நம்பியும் ஆரூரரைப் பின்பற்றித் திருமூலரைப் பிரான்' என்றே தாமும் போற்றுகின்றனர்; தாம் அருளிய திருத்தொண்டர் திருவந்தாதி யில் தம் உச்சியில் திருவடி சூட்டிய பிரான் திருமூலர் என்று அவரைப் போற்றி செய்து, அவரது வரலாற்றையும் சுருக்கிக் கூறியுள்ளார். சாத்தனூரிற் பசுக்களே மேய்த்திருந்தவனுடைய உடலிற் புகுந்து அவ்வுடலில் இருந்தபடியே சிவபிராகனத் :தமிழின்படி மன்னு வேதத்தின் சொற்படியே” பரவின . பிரான் திருமூலர் என்று பின்வரும் பாடலில் விளக்குகின்ருர் : குடிமன்னு சாத்தனூர்க் கோக்குல மேய்ப்போன் குரம்பைபுக்கு முடிமன்னு கூனற் பிறையாளன் தன்னை முழுத்தமிழின் படிமன்னு வேதத்தின் சொற்படி யேபர விட்டெனுச்சி அடிமன்ன வைத்த பிரான் மூல கிைன்ற அங்கணனே." கம்பியாண்டார் கம்பி இங்ங்னம் சுருக்கமாகக் கூறிய வரலாம் றைச் சேக்கிழார் பெருமான் தாம் அருளிய பெரிய புராணத்தில் விளக்கமாக எடுத்தோதியுள்ளார். சேக்கிழாரும் திருமூல தேவர்' என இவரைச் சிறப்பித்துள்ளார். பெரிய புராணக் தின்படி திருமூலர் வரலாறு சுருக்கமாகப் பின்வருமாறு: கயிலைமால் வரையைக் காத்தருளும் காயகராம் கர்தி தேவ ரின் திருவருள் பெற்ற யோகிகளுள் ஒருவர் திருமூலர். அவர்