பக்கம்:திருமந்திர ஆராய்ச்சியும் ஒப்புமைப் பகுதியும்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

3 அணிமாதி சித்தி பெற்றவர் ; பொதிய மலயிலிருந்த தம் நண்பர் குறுமுனிவரொடு சில நாள் உடனுறைய விரும்பிப் புறப்பட்டுக் கேதாரம், பசுபதி நேபாளம், காசி, பருப்பதம். காளத்தி, திரு வாலங்காடு, காஞ்சி, திருவதிகை, தில்லே முதலிய தலங்களைக் தரிசித்துத் திருவாவடுதுறைக்கு வந்து சிவதரிசனஞ் செய்து புறப்பட்டுச் சாத்தனூர் என்னும் ஊருக்கு அருகில் வரும் பொழுது அங்குப் பசுக்கள் மேய்ந்து கொண்டிருக்கும் இடத்தில் அவைகளை மேய்க்கும் இடையன் இறந்து கிடப்பதையும், அவ&னச் சுற்றிப் பசுக்கள் கண்ணிர் விட்டுப் புலம்பி சிற்பதை யுங் கண்டார். இந்த ஆயன் உயிர்பெற்று எழுந்தா லொழிய இப் பசுக்களின் துயரம் நீங்காதென உணர்ந்த இக் கருனே யாளர் தமது உடலை ஒருபுறம் சேமித்து வைத்துத் தம் உயிரை இறந்து கிடந்த மூலன் என்னும் பெயரிய அந்த இடையன் உடலில் அடைவித்து மூலய்ை உயிர்பெற்றெழுந்தனர். ஆயன் எழுந்ததைக் கண்ட பசுக்கள். அவனே நா க் த ழு ம் ப கக்கி, மோந்து, அணைந்து, கனைப்பொடு நயந்து, களிப்பில்ை வாலெடுத் துத் துள்ளித் துயரம் ங்ேகின. மாலைப்பொழுது வந்ததும் பசுக்கள் தத்தம் இல்லங்களுள் தாமே நுழைய மூலம்ை இவர் வெளியே கின் ருர். இவர் காலக் தாழ்த்து நிற்பதைக்கண்ட இவர் மனைவி இவருக்கு ஏதோ சனம் அடுத்ததுபோலும் எனக் கவன்று வந்து இவரை அழைக்க, எனக்கு உ ன் னு ட ன் யாதொரு தொடர்பும் இல்லே ' என்று இவர் சொல்லிப் பொது மடம் ஒன்றிற் புகுந்தார். பிற்றைகாள் கல்லார் பலர் வந்து இவரை அழைத்தும் பயனில்லாது போக இவருக்கு ஞான உணர்வு வந்து விட்டது, இவர் இனி வரமாட்டார் ' எனக்கூறி மூலன் மனையாளே அவர்கள் அழைத்துச் சென்றனர். அவர்கள் நீங்கியதும் திருமூலர் தமது பழைய உடலேத் தேடினர். அது காணப்படவில்லை. ஆ க ம ப் பொருளேத் தமிழில் வகுக்க வேண்டி இறைவன் உடலே மறைப்பித்தார் எனத் தமது ஞான உணர்வால் இவர் தேர்ந்து திருவாவடுதுறையை அடைந்து ஒர் அரச மரத்தின் கீழ்ச் சிவயோகத்தில் அமர்ந்து, ஆண்டுக்கு ஒரு பாடலாகச் சைவாகமங்களில் உணர்த்தப்பட்ட ஞானம், யோகம், கிரியை, சரியை என்னும் கிலகளே விளக்கும் மூவாயிரம்