பக்கம்:திருமந்திர ஆராய்ச்சியும் ஒப்புமைப் பகுதியும்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

4 பாடல்களைத் தெள்ளுதிங் தமிழில் உலகோர் உய்யும்படிப் பாடி, மூவாயிரம் ஆண்டு இப்புவியில் மகிழ்ந்திருந்து கயிலையிற் சிவன் தாள் அடைந்தார். அவர் அங்ங்னம் பாடிய பாடல்களுக்குத் * திருமந்திரமாலை , திருமந்திரம்' எனப் பெயர் கள் வழங்கலாயின. திருமூலர் காலம்: நம்பி ஆரூ ர ர | ல் போற்றப்பட்ட மையால் ஒன்பதாம் நூற்ருண்டுக்கு முன்னர் இவர் இருந்தார் என்பது தெளிவு. தமிழ் மூவாயிரஞ் சாத்தி மன்னிய மூவாயி ரத்தாண்டு இப்புவிமேல் மகிழ்ந்திருந்து' எனச் சேக்கிழார் பெருமான் கூறுவதால் கி. மு. 3100-க்கு முன்னரும் சித்தப் ப்ர சித்தராகிய இவர் இருந்திருத்தல் வேண்டும். பல்லாண்டு இவர் உயிர் வாழ்ந்தனர் என்பது, தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின் ஒப்பில் எழுகோடி யுகம்இருக் தேனே'-74 இருந்தேன் இக் காயத்தே எண்ணிலி கோடி-80 என்னும் இவர் திருவாக்காலும், சந்ததமும் இளமையோடிருக் கலாம்' எனத் தாயுமானவர் கூறியிருத்தலாலும் ஐயமின்றிக் கொள்ளக்கிடக்கின்றது. இவர் அருளிய திருமந்திரமாலே என்னும் நால் திருவாவடு துறைத் திருக்கோயிலுட் பலிபீடத்தருகிற் புதைந்து கிடந்ததாக வும், ஆங்குத் தரிசனத்துக்கு வந்த திருஞானசம்பந்த சுவாமிகள் பலிபீடத்தருகே வணங்கி எழுந்தபொழுது இங்குத் தமிழ் மணம் கமழுகின்றது ; தோண்டிப் பாருங்கள் எனக் கூற, அங் நனமே தோண்டினபொழுது இத் திருமந்திர நூல் கிடைத்த தென்றும் ஆன்ருேர் கூறுவர். இவ்வரலாறு உண்மையாயின் திருமூலர் காலம் ஏழாம் நூற்ருண்டுக்கு முன்னரும் போகும். திருமூலர் வரலாறு : அகச் சான்றுகள் : திருமந்திர நூலினின்றே திருமூலரைப் பற்றிய பல அரிய குறிப்புகள் கிடைக்கின்றன ; அவைதாம் : 1. சிவபிரானே இவரது வழிபடு கடவுள் : நந்தி என்னல் தொழப்படும் எம்இறை '-9