பக்கம்:திருமாவளவன்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 திருமாவளவன்

என்றும் அறியாது, அவன் முதியோனகவே இருப்பான் என எண்ணியிருந்தனர் எனவும், அவன் அதற்கு மாருக இளையோனுய் இருப்பது கண்டு வழக்குாைக்க நாணினர் எனவும் கொள்வது, அந்நாட்டு நிலைமையை அறியாது கொள்ளும் முடிவே ஆகும். . .

கரிகாலனுக்குக் காலத்தால் அண்மையில் வாழ்ந்த சாத்தனரே அங்கிகழ்ச்சியைக் கூறுகின்ருரே என்ருல், "இளமை காணி, முதுமை எய்தி உரை முடிவுகாட்டிய உரவோன்,' என்ற மணிமேகலைத் தொடர், கரிகாலனையே குறிப்பிடுகிறது என்று கொள்வதற்குரிய அகச்சான்று ஒன்றும் அதில் இல்லை என்பதை உற்றுநோக்குதல்வேண் டும். பழமொழிச் செய்யுள்மூலமும், சோழன்” எனப் பொதுவாகக் கூறியுளதே ஒழிய, கரிகாலன் பெயர் கூறிற்றில்லை என்பதையும் நோக்கினல், மணிமேகலை, பழ மொழிகூறும் நீதி வழங்கிய நிகழ்ச்சி, சோழர் குலத்தில் தோன்றிய ஒருவனேக் குறிக்கிறது என்று கொள்வதல்லது, அது, கரிகாலனையே குறிப்பிடுகிறது என்று கொள்வதற்.

கரிகாலன், தன் காட்டு வளத்தைப்பெருக்கச் செய்த அருஞ்செயல்கள் பல : காட்டின் விளைபொருள் பெருக வழிசெய்தான் முதற்கண், நாடுகளைச் சூழஇருந்த காடு களே அழித்து, அவற்றை வளமிக்க நிலங்களாக மாற்றி குன்; அங்கிலம் நீர் வளம் உடையதாக இருக்கவேண்டும் என எண்ணிய அவன், குளம் பல தோண்டி நீர்வளத்தை உண்டாக்கினன்; அந்நீர்வளமும் போதா என உணர்ந்த சரிகாலன், பயனின்றிக் கடலில் போய்ச் சேரும் காவிரி ைேரப் பயன்படுத்திக்கொள்ள எண்ணி, காவிரியின் இரு மருங்கும் கரை அமைத்து அணை கட்டி நீரைத்தேக்கி, நீர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/124&oldid=578898" இலிருந்து மீள்விக்கப்பட்டது