பக்கம்:திருமாவளவன்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.26 திருமாவளவன்

யும், அவரால் புரக்கப்பட்ட திவாகரரும், கல்லாடர் காலத்தோ, அன்றி அவர்க்கு முற்பட்ட காலத்தோ வாழ்ந்தவராதல் வேண்டும். திவாகரர், வேளிரே சளுக் கியர் என்று கூறுகின்ருர். ஆகவே, திவாகரரும், அம்பர் கிழான் அருவந்தையும், கல்லாடரும், சளுக்கியர் காலத்தவ ராவர். கல்லாடர் சங்ககாலப் புலவர் ; ஆகவே, சங்க காலமும், சளுக்கியர்காலமும் ஒன்றே; சளுக்கியர் வரலாறு கி. பி. ஐந்தாம் நூற்றண்டிலேயே முதல் முதல் அறியப் படுகின்றது ; ஆகவே, சங்ககாலம் ஐந்தாம் அாற்ருண்டைச் சேர்ந்ததே. - -

8 மணிமேகலை என்ற நூல் சங்ககாலப் புலவர் சாத்தனால் பாடப்பெற்றது; அதில், "குச்சாக் குடிகைத் தன்னகம்புக்கு,' என்ற தொடர் காணப்படுகிறது; இதில்வரும் குச்சரக் குடிகை என்பது குறித்து, அங் நூலிற்குக் குறிப்புரை எழுதி அதை வெளியிட்ட பேராசி ரியர் உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள், 'கூர்ச்சா தேசத்துப் பணியமைந்த சிறிய கோயில்; கூர்ச்சா தேசம் - சிற்பத்திற்குப் பெயர்பெற்றது. N என்பர் ;.......கூர்ச்சரம் என்பது குஜ்ஜரம் என்று கன்னடபாஷையில் வழங்கப் படுகின்றது," என்று எழுதியுள்ளார்கள். கூர்ச்சார் வரலாறு கி. பி. ஐந்தாம் நூற்றண்டிற்குமுன் அறியப்பட வில்லை; ஆகவே, அவர்களைக்குறிக்கும் மணிமேசலையும், அதன் ஆசிரியர் சாத்தனர் வாழ்ந்த சங்ககாலமும், ஐந்தாம் நாற்ருண்டிற்கு முற்பட்டனவாகா. -

4. நக்கீரர், சங்ககாலப் புலவர்; இவரே இறையனர் . களவியலுக்கு உரை எழுதியவருமாவர்; அவ்வுரை எட்டில் எழுதப்படாமல் பத்துத் தலைமுறைவரை, ஆசிரியர், மான

1 மணிமேகலை, 18:145. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/138&oldid=578912" இலிருந்து மீள்விக்கப்பட்டது