பக்கம்:திருமாவளவன்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற்ருேரும் உற்ருேரும் 35

பொன்னுற் செய்த பாண்டில் மணிகள் ஒலிப்ப அழகுபெற . ஆடிக்கொண்டிருந்தான். அப்பொழுது அவன் வெள்ளத் தால் ஈர்க்கப்பட்டு, அதன் வழியே சென்று கடலிற் சேர்க் தான். வெள்ளிவீதியாராலும் போற்றப்படும் நல்லி சைப் புலமை வாய்ந்த, அவன் மனைவி ஆதிமந்தியார்? கண வன் புனலால் இழுக்கப்பட்டதை அறிந்து பலநாடுகளி லும், பல ஊர்களிலும் சென்று அவனத் தேடிக் காணு ளாய்க் கவன்று அலைந்து திரிந்தாள். அப்பொழுது மருதி என்பவள் கடல் வாய்ப்பட்டிருந்த ஆட்டனத்தியை அவ ளுக்குக் காட்டிக் கடலுள் புகுந்துவிட்டாள்" என்ற வர லாறு பரணர் பாக்களாலும், பிற பாக்களாலும் அறியப் படுகிறது. ஆதிமந்தியார், கரிகாலன் மகள் என்றும்,

1. ஒலிகதிர்க் கழனிக் கழாஅர் முன்றுறைக்

கலிகொள் சுற்றமொடு கரிகால் காணத் தண்பதங் கொண்டு தவிர்ந்த இன்னிசை ஒண்பொறிப் புனைகழல் சேவடிப் புரளக் கருங்கச்சு யாத்த காண்பின் அவ்வயிற்று இரும்பொலம் பாண்டில் மணியொடு தெளிர்ப்பப் புனல் நயந்தாடும் அத்தி அணி நயந்து காவிரி கொண்டொளித் தாங்கு” -அகம், 376.

2. காதலற் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்து

ஆதிமந்தி போலப் பேதுற்று” -அகம். 45. 3. 'ஆட்ட னத்தியைக் காணிரோ வென

ாாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் - கடல் கொண்டன்று எனப் புனல் ஒளித்தன்று எனக் கலுழ்ந்த கண்ணள் காதலற் கெடுத்த - - ஆதிமந்தி” -அகம். 236. 4. 'ஆதிமந்தி காதலற் காட்டிப் -

படுகடல் புக்க பாடல்சால் சிறப்பின்

மருதி

$x

-அகம் 222

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/47&oldid=578821" இலிருந்து மீள்விக்கப்பட்டது