பக்கம்:திருமாவளவன்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. காஞ்சிநாடும் கரிகாலனும்

கரிகாற்பெருவளத்தானுடைய ஆட்சிப் பாப் பின் அளவு அறிஞர் பலர்தம் ஆராய்ச்சிக் குட்பட்டு கிற்கிறது. கரிகாலனுடைய வரலாற்றை அறியும் வாயில்களாக உள்ள பண்டை இலக்கியங்களுள், பட்டினப்பாலை வடவர் வாட’’ எனப் பொதுவாகவும், சிலப்பதிகாரம் அவனு டைய இமயமலைப் படையெடுப்பையும், வச்சிரம், மகதம், அவங்கி முதலாய வடநாட்டரசர்கள் தக்க இறைப்பொரு ளைப் பெற்று மீண்டதையும் விளக்கமாகவும் அறிவிக்கின் றனவே ஒழிய, அவனுக்கும், காஞ்சிசகர்க்கும் உள்ள தொடர்பு குறித்து ஒன்றுமே அறிவியாமல் விட்டுவிட் டமையானும், கரிகாலனைப் பாடியு (பட்டினப்பாலை) கடிய லூர் உருத்திரங்கண்ணனரே காஞ்சியைத் தலைநகமாகக்

1. பட்டினப்பாலே 276. > - + 2. செருவெங் காதலிற் றிருமா வளவன் - வாளுங் குடையும் மயிர்க்கண் முரசும்

நாளொடு பெயர்த்து நண்ணுர்ப் பெறுகவிம் மண்ணக மருங்கினென் வலிகெழு தோளெனப் புண்ணியத் திசைமுகம் போகிய அந்நாள் அசைவி லூக்கத்து சைபிறக் கொழியப் பகைவிலக் கியதிப் பயங்கெழு மலயென இமையவருறையுஞ் சிமையப் பிடர்த்தல்க் கொடுவரியொற்றிக் கொள்கையிற் பெயர்வோற்கு மார்ே வேலி வச்சிர் என்னுட்டுக் - கோனிறை கொடுத்த கொற்றப் பக்தரும் மகதகன்னட்டு வாள்வாய் வேந்தன் பகைப்புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும் அவந்தி. வேந்தன்-உவங்தனன் கொடுத்த கிவந்தோங்கு மரபிற் ருோண வாயிலும்” .

-சிலம்பு. 5 : 89-104.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/77&oldid=578851" இலிருந்து மீள்விக்கப்பட்டது