பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 திருமுருகாற்றுப்படை விளக்கம் காற்றத்தையுடைய கரிய தலையை, பளபளக்கும் வளையை யணிந்த வளைந்த கையில் ஏந்திக்கொண்டு, கண்டோர் அஞ்சும்படியாக, முருகன் வென்று போர் செய்த வெற்றிக் களத்தைப் பாடித் தோளே அசைத்துக்கொண்டு. தசையைத் தின்னும் வாயையுடையவளாய்த் துணங்கைக் கூத்து ஆடும்படி) போர் நிகழும்போது யார் வெல்கிருர்களோ அவர் களுக்கு அந்தக் களம் உரியதாகும். இங்கே முருகப் பெருமானுக்குரிய போர்க்களம் அது. ஆகையால் அந்தப் போர்க்களத்தைப் பாடுவது என்ருல் முருகப்பெருமானைச் சேர்த்துப் பாடுவது என்பதுதான் பொருள். - சூர சங்காரம் இவ்வாறு பேய்மகள் ஒருத்தியின் ஆடலைக் காட்டிய முகத்தில்ை வேறு பல பேய்மகளிரும் இப்படியே ஆடி ஆனந்தம் அடைந்தனர் என்பதைக் குறிப்பாக உணரச் செய்கிருர், துணங்கைக் கூத்து என்பது கையைக் கோத்துக் கொண்டு பலர் ஆடும் ஆட்டம். சூரன் குதிரை முகமும், மனித உருவமும் இணைந்த பெரிய உடம்பை உடையவன் என்பது பழைய வரலாறு. அந்தப் பெரிய உடம்பு போர்க்களத்தில் வான ளாவ கின்று போர் செய்தது. முருகன் ஆறு திருமுகங்க ளுடன் வெவ்வேறு வகையில் சென்று பெரும் போர் செய். தான். அந்த நேரத்தில் அவுணர்கள் எல்லாம் சேர்ந்து குரபன்மாவைத் தலைவனுகக் கொண்டு போரிட்டார்கள். பின்பு சூரன் மாமரமாக மாறிக் கடலுள் புகுந்தான் . அப்போது தன்னுடைய வேலே ஏவி முருகன் அந்த மாமரத் தைத் தடிங்தான். அந்த மரம் தலை கீழாக கின்றதாம்;. காய், கனி, கொம்பு எல்லாம் கீழாகவும். வேர் மேலாகவும் இருந்தனவாம்; அசுரர்கள் எதிலும் தலைகீழாக நிற்பவர்கள்