பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 - - திருமுருகாற்றுப்படை விளக்கம் (அறிய முடியாத நல்ல புகழையும் சிவக்க வேலையும் உடைய முருகன்.) இந்தக் கோலத்தோடு விளங்கும் முருகனுடைய திருவடியைப் பற்றிக்கொண்டு கலம் பெறவேண்டும் என்ற ஆர்வத்தோடு ஒரு புலவன் புறப்பட்டிருக்கிருன். ஆசை இருக்கிறதேயன்றி வழி தெரியாது. ஆறு இன்னதென்று. தெரியாத அவனுக்கு, இதுதான் வழி என்று காட்ட முன், வருகிருர் நக்கீரர். : தட்டிக் கொடுத்தல் முருகன் திருவருளேப் பெறவேண்டும் என்று விருப்பிப் புறப்பட்டவனே வழிகாட்டும் புலவர் தட்டிக் கொடுக் கிருர், இது பெருந்தன்மை உள்ளவர்களின் இயல்பு. யோ முருகனேக் காணப் போகிருய்? உனக்கு என்ன தகுதி இருக் கிறது? தானம் செய்தாயா? தவம் செய்தாயா? பொறி புலன் களே அடக்கியைா?" என்று கேட்டு அச்சுறுத்தி, கேட்பவனே, "நமக்கும் முருகன் அருளுக்கும் நெடுந்துாரம்' என்று எண்ணும்படி செய்திருக்கலாம். அப்படிச் செய்கிற வர்கள் இருக்கிருர்கள். கடவுளேத் தொழுவதும், பூசை பண்ணுவதும், பாடுவதும் தங்களுக்கே உரிய தனியுரிமை யென்றும் சினேக்கிறவர்கள் சிலர் இருக்கிருர்கள். இறைவனைப்போல யாவருக்கும் இரங்கும் கருணையாளன் யாரும் இல்லை. அவனுக்கு வேண்டாதவர் யாரும் இல்லை. கடவுள் இல்லை என்று சொல்கிறவர்களுக்கும் வேண்டிய வாழ்வை அளிக்கும் பரம தயாளு அவன். - அவனுடைய அருள் பெற்ற பெரியவர்களுக்கு உலக மெல்லாம் கன்ருக வாழவேண்டும் என்ற கருணையே. மீதுார்ந்து விற்கும். 'வையகமும் துயர் தீர்கவே", "ஞாலம்