பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மல் உள்ளம் 9t. பின்புகழே மிக வேண்டும்" என்று ஞானசம்பந்தப்பெருமான் திருவாய் மலர்ந்தருளினர். ஆகவே இறைவனே நாடிச் செல்பவர்களுக்கு ஊக்கம் ஊட்டி கல்வழிப்படுத்துவது அவர்கள் இயல்பு. இங்கே நக்கீரர், முருகனைக் காணச் செல்லும் புலவனுக்கு ஊக்கம் உண்டாகும் வகையில் பேசுகிருர், - "அப்பா! நீ நல்ல காரியம் செய்தாய். நன்மையையே விரும்பி இப்படி ஒரு குறிக்கோளை நீ மேற்கொண்டாயே!” உன் கலம்புரி கொள்கை பாராட்டுவதற்குரியது' என்று முதலில் சொல்கிருர். அப்பால் அவனுடைய உறுதியைப் பாராட்டுகிருர், எண்ணமும் செயலும் கலத்தைப் பெறவேண்டும் என்னும் ஆசை யாவருக்கும் இருக்கிறது. அதற்குரிய வழி இன்னதென்று பெரியவர்கள் சொல்லக் கேட்கிருேம். அந்த வழியிற் செல்பவர்களைக் கண்டால் பாராட்டத் தயாராக இருக்கிருேம். ஆனல் அந்தக் காரியத்தை நாமே செய்ய முன் வருவதில்லே. இது: பெரிய விசித்திரம். - இந்த உடம்பு நிலையாது என்பது யாவருக்கும் தெரியும். இந்த வாழ்க்கையின் இறுதியில் மரணம் சம்பவிக்கும் என்பதும் யாவருக்கும் தெரிந்த செய்திதான். எப்போதும் போல் உண்டும், உடுத்தும், புலன்களுக்குரிய இன்பத்தை நுகர்ந்தும், உறங்கியும் வாழ்ந்துவந்தால் காம் முன்னேற முடியாது, மரணத் துன்பத்தை நம்மால் மாற்றிக்கொள்ள முடியாது என்பதும் நமக்குத் தெரியும். ஆனல் இந்த உலகியல் முயற்சிகளை விட்டோ, அல்லது இவற்றிற்கு இடையிலோ இறைவன் அருளைப் பெறத் தீவிரமாக ஏதும் நாம் செய்வதில்லை. மக்கு எப்போதாவது நல்லது செய்ய