பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

• 92 திருமுருகாற்றுப்பட்ை விளக்கம் வேண்டும் என்ற எண்ணம் தோன்றினல் அது புராண வைராக்கியமாகவும் பிரசவ வைராக்கியமாகவும் சிறிது நேரம் இருந்து மறைந்து போகிறது. பழையபடி எப்போதும் உள்ள வாசனைகள் வந்து கப்பிக்கொள்கின்றன. ஆகவே, நலத்தை விரும்பும் எண்ணம் இருந்தால் மட்டும் போதாது; அந்தத் துறையில் செயலாற்ற வேண்டும். எண்ணுகிறவர்களே குறைவுதான். அவர்களிலும் செயலிற் புகுபவர்கள் மிகமிகக் குறைவு. இந்த உண்மையை உணர்ந்து வழிகாட்டப் புகுந்த புலவர் பெருமான், "அப்பா! உன் கொள்கை கல்லது; அதற்குமேல், நீ தணிந்து அந்தக் கொள்கையின்படி கடக்கத் துணிந்தாயே, அது மிக மிக நல்லது' என்கிருர், பிரபஞ்ச வாசனை கம்மிடத்தில் அகாதி காலமாக உள்ள வாசனைகள் எளிதில் நீங்குவதில்லை. பிரபஞ்ச வாசனை சேருக கம்மிடம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதை இறைவன் அன்பு நீரில் கழுவிக் கொள்ள வகை உண்டு. அப்படிக் கழுவிக்கொள்ளத் துணையாக இருக்க வேண்டுமென்றே இறைவன் இந்த உடம்பையும், இதில் பல நுட்பமான கரணங்களையும், பூமியையும், போகத்தையும் தந்திருக் கிருன். நீராடப் போய்ச் சேற்றைப் பூசிக்கொண்ட கதையாக, இந்த வசதிகளே வைத்துக்கொண்டு இறை வனுக்குத் தொண்டு பூண்டு வாழ்வதை விட்டுவிட்டு. .மீட்டும் பிரபஞ்ச வாசகனயை மிகுதிப்படுத்திக் கொள் கிருேம். - இறைவன் திருவருள் நம்மை இந்தப் பிரபஞ்சச் சேற்றினின்றும் மீட்கவேண்டும். அருணகிரியார் கந்தர் அலங்காரத்தின் முதற்பாட்டில் இறைவன்