பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மல் உள்ளம் 93. தமக்குப் பிரபஞ்சச் சேற்றை நீக்குவித்தான் என்று பாடுகிருர், 'பேற்றைத் தவஞ்சற்றும் இல்லாத என்னை ப்ரபஞ்சமென்னும் . சேற்றைக் கழிய வழிவிட்டவா!' என்பது அவர் திருவாக்கு. நம்மைத் தளைக்குள் அகப்படுத்தி வைத்திருக்கும் இந்தப் பிரபஞ்சத்தை விடுவதற்கு நாம் சித்தமாக இல்லே. இந்த உடம்பை காம் கட்டுப்படுத்தாமல் உடம்புக்கும் இந்திரியங்களுக்கும் மனத்துக்கும் அடிமையாகிவிட்டோம். இந்தக் தொடர்பை விடுவதற்கு மக்கு மனம் வருவதே. இல்லே. - . சில பேர்களுக்குத் தம் வீட்டில் தூங்கில்ைதான் து.ாக்கம் வரும்; வேறு இடங்களுக்குச் சென்று படுத்தால் நல்ல தூக்கம் வருவதில்லே. கம் உடம்பு, நம் வீடு, கம் ஊர், நம் மனிதர்கள் என்ற சூழ்நிலை நம்மினும் வேறின்றி இணைந்திருக்கின்றன. அவற்றை உதறித் தள்ளும் எண்ணம் நமக்கு வருவதில்லை. ஒருகால் வந்தாலும் உறுதி யாக விற்பதில்லே. பழகின இடத்தை விட்டுப் பூனே செல்லாது என்பார்கள். நாமும் அப்படித்தான் இருக்கி ருேம். நாம் பல பிறவிகளில் பிறந்து பிறந்து பழகிப்போன - இடம் பிரபஞ்சம். இதை விட்டுவிட நமக்கு என்றும் மனம் வருவதில்லை. - . . . . - காதலும் பற்றும் ஆனல் இதனினும் சிறந்த இடம் ஒன்று கிடைக்கும். என்ற உறுதியான கம்பிக்கை ஒருவனுக்கு உண்டானல் எதையும் விட்டுவிடுவான். இந்த நாட்டில் பெண்களின் வாழ்க்கையைப் பார்க்கலாம். தந்தை வீட்டில் எல்லா வகையான வசதிகளுடனும் வாழ்கிருள் பெண். தாயையும்.